azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Egoism and greed are still rampant; hatred has not abated and envy eats into the vitals of society. There is no dearth of scriptural books telling you how to be free from grief. All sacred and holy books including Gita, Bhagavata and Ramayana are available in all languages at a very low cost and most books are sold in more than thousands of copies per day; but there is nothing to indicate that they have been read and assimilated. The breath of the mouth must give an inkling of the food partaken, is it not? But the habits, the conduct, the character of the readers of these books have not undergone any change for the better. Hence each of you must examine your own mental make-up and evaluate whether you have used your discrimination and worldly knowledge to clothe yourself in detachment (vairagya), so that you do not suffer from attachment to things that will fade away. (Dharma Vahini, Ch 2.)
அஹங்காரமும், பேராசையும் இன்னும் தலைவிரித்தாடுகின்றன; த்வேஷம் குறையவே இல்லை; பொறாமை சமுதாயத்தின் இன்றியமையாதவைகளையே கபளீகரமாக்கிக் கொண்டு இருக்கிறது. துயரத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று உங்களுக்குச் சொல்லும் ஆன்மீகப் புத்தகங்களுக்குக் குறைவே இல்லை. ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் மற்றும் ஸ்ரீமத் ராமாயணம் போன்ற அனைத்துப் புனிதமான மற்றும் பரிசுத்தமான நூல்கள் அனைத்து மொழிகளிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன; பெரும்பாலான புத்தகங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் விற்பனையும் ஆகின்றன; ஆனால் அவை படிக்கப் பட்டு, புரிந்து கொள்ளப் பட்டதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. வாயிலிருந்து வரும் சுவாசம் உட்கொண்ட உணவைப் பற்றிய அறிகுறியைத் தர வேண்டும் அல்லவா?ஆனால், இந்தப் புத்தகங்களைப் படித்தவர்களது பழக்க வழக்கங்கள், நடத்தை,மேலும் குணாதிசியங்கள் எந்த விதமான நல்ல வித மாற்றம் அடையவில்லை. எனவே, மறையப் போகும் பொருட்களின் மீது வைக்கும் பற்றுதலினால் நீங்கள் துயரமடையாமல் இருக்க வேண்டுமானால்,நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது மனப்பாங்கினை ஆராய்ந்து, உங்களது பகுத்தறிவையும்,உலக ஞானத்தையும், வைராக்யம் என்ற ஆடையை அணிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தினீர்களா என சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.