azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

When people complain that they cannot concentrate, I laugh, for even the driver of a car is a master of the art of concentration. The taxi driver does not pay heed to the chatter from the seat behind or to the radio. He is watching the road ahead with single-pointed attention. If you have earnestness and faith (shraddha), more than half the battle is won. That is why, Krishna asks Arjuna, "Have you listened to what I have said with one-pointed attention?" Arjuna, even in the midst of the opposing armies in the battle-field, affirmed he listened to the words of the Lord with keen concentration. Practice concentration and it will stand you in good stead. Also, do not mistake the technique for the goal; do not lose your way in the tangle of scholarship. Scholarship and learning are only the means for the mastery of the Mind, to turn it from the Creation to the Creator. (Divine Discourse, Jan 22, 1960)
மனிதர்கள் தங்களால் மனக்குவிப்பை ஏற்படுத்த முடியவில்லை என்று புலம்பும் போது எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது; ஏனென்றால், ஒரு காரை ஓட்டுபவர் கூட மனக்குவிப்புக் கலையின் சிறந்த கலைஞன் ஆவான். டாக்ஸியை ஓட்டுபவன், அவரது இருக்கைக்குப் பின்னால் இருந்து வரும் இடையறாத பேச்சையோ அல்லது ரேடியோவையோ கவனிப்பதில்லை.அவன் ஒருமித்த மனதுடன் முன்னால் இருக்கும் பாதையை கவனித்துக் கொண்டு இருப்பான். உங்களுக்கு பக்தியும், சிரத்தையும் (ஸ்ரத்தா-சபூரி) இருக்குமானால், பாதியை விட அதிகமாக போராட்டத்தில் வென்றவர்கள் ஆவீர்கள். அதனால் தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ,அர்ஜூனனை, '' நான் சொன்னவற்றை ஒருமித்த மனதுடன் கேட்டாயா? '' என்று கேட்கிறார். அர்ஜூனன், ஒன்றை ஒன்று எதிர்த்து போர்க்களத்தில் நின்றிருந்த சேனைகளுக்கு நடுவிலும், பகவானின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்ததாக உறுதி செய்தான். மனக்குவிப்பைப் பயிலுங்கள்; அது உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருக்கும். அதே சமயம், செய்யும் முறையே, குறிக்கோள் எனத் தவறாக எடுத்துக் கொண்டு விடாதீர்கள்: பாண்டித்தியத்தின் வலையில் சிக்கி உங்கள் வழியை தவற விட்டு விடாதீர்கள். பாண்டித்தியமும், கல்வியும், படைப்பிலிருந்து மனதை படைத்தவன் மீது திருப்பி, அதை வெல்வதற்கான கருவிகள் மட்டுமே.