azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Why complain that the ground cannot be seen when all the while your gaze is fixed on the sky? Watch the ground and look at the sheet of water that reflects the sky —then you can see, at the same time, the sky above and the earth below. So too, to adhere to the law of truth (sathya-dharma), in your every act, you must see the reflection of the glory of the Divine (Atma); then this attachment to the Lord will transmute your attachment to the world into a pure offering. Adherence to the law of truth is in fact the practice of the immanent Atmic principle. The goal of purity should not be altered or lowered; the essentials should be kept intact. Righteousness (Dharma) does not depend on the various names and forms that its application entails; they are not so basic. Dharma depends more on the motives and the feelings that direct and channelise your every act. (Dharma Vahini, Ch 2.)
எப்போதும் உங்கள் பார்வையை ஆகாயத்தை நோக்கி வைத்துக் கொண்டு, தரையே தெரியவில்லையே என்று ஏன் குறை கூறுகிறீர்கள் ? பூமியையும், ஆகாயத்தையே பிரதிபலிக்கும் பரந்த நீர்ப்பரப்பையும் பாருங்கள் - பின்னர் மேல் இருக்கும் ஆகாயத்தையும், கீழே இருக்கும் பூமியையும் ஒரே சமயத்தில் காண்பீர்கள். அதைப் போலவே,சத்ய-தர்மத்தின் சட்டங்களைப் பற்றி ஒழுகுவதற்கு நீங்கள், உங்களது ஒவ்வொரு செயலிலும் தெய்வீகத்தின் (ஆத்மாவின்) மகத்தான பிரதிபலிப்பைக் கட்டாயம் காண வேண்டும்; பின்னர் இறைவன் மீதான இந்தப் பற்றுதல், உலகின் மீதான உங்களது பற்றுதலை ஒரு தூய்மையான அர்ப்பணிப்பாக மாற்றி விடும். சத்தியம் எனும் சட்டத்தைப் பற்றி ஒழுகுவதே, உண்மையில் உள்ளுறையும் ஆத்ம தத்துவத்தைக் கடைப்பிடிப்பதாகும். தூய்மையின் குறிக்கோளை மாற்றவோ அல்லது தாழ்த்தவோ கூடாது; அத்தியாவசிமானவைகளை அப்படியே பராமரிக்க வேண்டும். தர்மம், அதைப் பின்பற்றுவதில் உள்ள பல விதமான நாம, ரூபங்களைச் சார்ந்திருப்பதில்லை; அவை அவ்வளவு அடிப்படையானவையும் அல்ல. தர்மம் பெரும்பாலும் , உங்களது ஒவ்வொரு செயலையும் வழிநடத்தி, வரையறுக்கும் உந்துதல்கள் மற்றும் உணர்வுகளைப் பொறுத்ததாகும்.