azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Uttering the truth is easy. But indulging in falsehood is a tortuous process. One has to take a lot of trouble to cover up one lie with more lies. Hence it is said: Speak the truth, speak what is pleasing, do not utter truth that is unpleasant (Sathyam brooyath; priyam brooyath; na brooyath Sathyam Apriyam). God is the embodiment of Truth. Truth is the foundation of the universe. This transcendental changeless Truth is beyond mind, speech and the categories of time and space. Vedanta has described it as ‘Ritam’. Live up to this Truth. Internalize the fact that the Lord is present in everyone. Only when you recognise the omnipresence of the Divine, will you easily experience the Divine. Hence from today give up swartha (selfishness), turn your mind towards the Supreme (Parartha), lead a life of Truth (Yadartha) and sanctify your lives. If you earn the love of God even to the slightest extent, you will experience infinite joy. (Divine Discourse, Sep 15, 1988.)
உண்மையைப் பேசுவது எளிதானது.ஆனால் பொய்மையில் இறங்குவது ஒரு கடினமான முறை.ஒருவர் , ஒரு பொய்யை ,பல பொய்களால் மறைப்பதற்கு மிகவும் பாடுபட வேண்டும். எனவே தான், '' சத்தியத்தையே பேசு,எது இனிமையானதோ அதையே பேசு, இனிமையற்ற சத்தியத்தைப் பேசாதே '' ( ஸத்யம் ப்ரூயாத்,ப்ரியம் ப்ரூயாத்,ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம் ) எனப் படுகிறது. இறைவன் ஸத்யஸ்வரூபன்.ஸத்யமே இந்த உலகின் அஸ்திவாரம். இந்த, அனைத்தையும் கடந்து செல்லக் கூடிய, மாற்றமே அற்ற ஸத்யம், மனம் , வாக்கு மற்றும் கால தேசங்களுக்கு அப்பாற்பட்டது. வேதாந்தம் இதை, '' ரிதம்'' என்கிறது.இந்த ஸத்யத்தின் படி வாழுங்கள்.இறைவன் ஒவ்வொருவரிலும் உறைகிறான் என்பதை உள்ளாக்கிக் கொள்ளுங்கள். எப்போது இறைவனது அங்கிங்கெனாதபடி விளங்கும் தன்மையை உணருகிறீர்களோ, அப்போது தான் நீங்கள் எளிதாக இறைவனை அனுபவிக்க முடியும். எனவே, இன்றிலிருந்து '' ஸ்வார்த்தத்தை ''(சுயநலத்தை) விடுத்து, உங்கள் மனதை பரப்ரம்மத்தை (பரார்த்தா ) நோக்கித் திருப்பி ,ஸத்யமான வாழ்க்கை ( யதார்த்தா ) நடத்தி . உங்களது வாழ்வைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இறைவன் பால் சிறிதளவேனும் அன்பைப் பெற்றால் கூட,அளவற்ற ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.