azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

You may install idols and worship them. But do not forget the inner significance of all that worship. All external activities are necessary only to help you to get the spirit of non-duality and experience unity in diversity. Love and sacrifice are very important. Where there is pure, unsullied, selfless, sacred and sublime love there is no fear at all. Giving and not getting is the underlying principle of spiritual sadhana. Your heart is full of love, but you are using it only for selfish purposes instead of diverting it towards God. God is in the heart and not in the head. The heart is full of love. Every day, remind yourself that God is one; all religions uphold the same principle of ‘One God, who is omnipresent.’ Do not have contempt for any religion, as each is a pathway to God. Fostering love towards your fellow-beings, receive the blessings of the Divine. This is the goal of life. (Divine Discourse, 9-Sep-1994)
நீங்கள் விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து வழிபடக் கூடும்.ஆனால் இந்த வழிபாடுகள் அனைத்தின் உட்கருத்தை மறந்து விடாதீர்கள்.வெளிப்புறமான செயல்கள் அனைத்தும்,அத்வைதத்தின் சாரத்தை நீங்கள் பெறுவதற்கும் வேற்றுமையில் ஒற்றுமையை உணர்வதற்கும் உதவி புரிவதற்கே அவசியமாகின்றன. அன்பும்,தியாகமும் மிகவும் முக்கியமானவை.எங்கு தூய்மையான, களங்கமற்ற, தன்னலமற்ற, புனிதமான மற்றும் மேலான அன்பு இருக்கிறதோ அங்கு அச்சமே இருக்காது.ஆன்மீக சாதனையின் அடிப்படைக் கோட்பாடு தருவதே அன்றி, பெறுவதல்ல.உங்கள் இதயம் அன்பு நிறைந்ததாகத்தான் இருக்கிறது; ஆனால் நீங்கள் அதை இறைவன் பால் திருப்பாது,சுயநலமான குறிக்கோள்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். இறைவன் இதயத்தில் உறைகிறானே அன்றி புத்தியில் அல்ல. இதயம் அன்பால் நிறைந்தது. ஒவ்வொரு நாளும், இறைவன் ஒருவனே என்பதை உங்களுக்கே ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்; அனைத்து மதங்களும் '' இறைவன் ஒருவனே, அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்'' என்ற கோட்பாட்டைக் கொண்டவையாகவே இருக்கின்றன.எந்த மதத்தின் மீதும் த்வேஷம் கொள்ளாதீர்கள், ஏனெனில் ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக மார்க்கமே. சக மனிதர்களின் பால் அன்பைப் பேணி இறைவனது அருளைப் பெறுங்கள். இதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்.