azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

God is infinite. It is impossible to measure Him or compare Him with anything, for there is no ‘other’ to compare. He is omnipresent. The Vedas declare, “He is One alone without a second“ (Ekam eva Advitiyam). The Divine willed: “I am One; I shall become many” (Ekoham Bahusyaam). By His Will God manifested Himself in the many. All religions have accepted this truth. The Bible declares: "God created man in His own image." Thus from the One, the manifold cosmos emerged. With the growth of knowledge, the animal nature in man has diminished and he has been able to develop and refine his culture. As the saying goes, Divine appears in human form (Daivam maanusha rupena). Hence do not consider yourself as a mere product of Nature, a creature of the senses and the physical elements. You are an embodiment of Divinity. (Divine Discourse, 15-Sep-1988)
இறைவன் அளவிட முடியாதவன்.அவனை அளப்பதோ அல்லது எதனுடனாவது ஒப்பிட்டுப் பார்ப்பதோ இயலாத காரியம், ஏனெனில், அவனோடு ஒப்பிடுவதற்கு என்று வேறு எதுவும் இல்லை.அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.வேதங்கள், '' அவன், இரண்டாவது என்று ஒன்று இல்லாத ஒரே ஒருவன் ( ஏகம் ஏவ அத்விதீயம் )'' என்று பறைசாற்றுகின்றன. இறைவன் ,'' நான் ஒருவனே. நான் பலராக ஆவேனாகுக (ஏகோஹம் பஹுஷ்யாம்)'' என ஸங்கல்பித்தான். அவனது ஸங்கல்பத்தினால், இறைவன் தானே பலவாறாக வெளிப்பட்டுள்ளான். அனைத்து மதங்களும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. பைபிள், '' இறைவன் மனிதனை தனது உருவாகவே படைத்தான் '' என அறிவிக்கிறது. இவ்வாறு ஒரே ஒன்றாக இருந்த இறைவனிடமிருந்தே இந்த பிரபஞ்சம் வெளிப்பட்டுள்ளது. அறிவு பெருகப் பெருக, மனிதனுடைய , மிருக இயல்பு குறைந்து அவனால் தனது கலாசாரத்தை வளர்த்துக் கொண்டு அதை சீரடையச் செய்ய முடிந்தது. தெய்வம் மனித உருவில் வருகிறது ( தெய்வம் மானுஷ்ய ரூபேனா ) என்பார்கள். எனவே, நீங்கள் உங்களை இயற்கையின் வெறும் ஒரு படைப்பாகவோ, புலன்கள் மற்றும் பஞ்சபூதங்களால் ஆன ஒரு ஜந்துவாகவோ கருதாதீர்கள். நீங்கள் தெய்வீக ஸ்வரூபமே.