azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Easwara blessed Ganapathi saying, "I have many attributes, but not Your intelligence. Hence, before offering worship to Me, let all people worship You. This is the boon I confer on You." Easwara is a parent who conferred such an honour of a higher status than His own on His son. Hence Ganapathi represents no commonplace principle. He is the embodiment of all potencies. He is the abode of every kind of intelligence. Nothing untoward can happen wherever He is present. Ganapathi occupies the position of one who is the source of all prosperity. Moreover, when He is invoked before any undertaking, there will be no impediments to its completion. People look upon the Vighneswara festival as some routine affair. But Vighneswara embodies all the forms and all the powers of all the deities. It is not enough to worship Him once a year. We must worship Him always. (Divine Discourse, Aug 25, 1998)
ஈஸ்வரன், கணபதியை,'' என்னிடம் பல குணாதிசியங்கள் உள்ளன; ஆனால் புத்தியில் சிறந்தவன் நீயே. எனவே, என்னை வழி படுவதற்கு முன், அனைவரும் உன்னை வழி படுவார்களாக.இந்த வரத்தை உனக்கு நான் அளிக்கிறேன்.'' என ஆசீர்வதித்தார். தன்னை விடவே உயர்ந்த ஸ்தானத்தை, தனது மைந்தனுக்கு அளித்த தந்தை ஈஸ்வரன். எனவே, கணபதி ஏதோ சாதாரணமான தத்துவத்தைக் குறிப்பவரல்ல.அனைத்து சக்திகளின் ஸ்வரூபம் அவரே. அனைத்து புத்திகளின் உறைவிடமும் அவரே.அவர் இருக்கும் இடத்தில் எந்த விதமான அஸம்பாவிதமும் நிகழாது. அனைத்து செல்வங்களின் மூலம் என்ற ஸ்தானத்தை அவர் வகிக்கிறார். மேலும் எந்த ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன் அவரை வழிபடும்போது, அதை முடிப்பதற்கு எந்த விதமான தடையும் ஏற்படாது. மனிதர்கள் விக்னேஸ்வர பண்டிகையை ஏதோ ஒரு வழக்கமான சடங்காகக் கருதுகிறார்கள். ஆனால் விக்னேஸ்வரர், எல்லாத் தெய்வங்களின், அனைத்து ரூபங்கள் மற்றும் அனைத்து சக்திகளை உள்ளடக்கியவர். அவரை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வழிபட்டால் போதாது. நாம் அவரை எப்போதும் வழிபட வேண்டும்.