azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

For spiritual progress kshama (forbearance) is the real basis or foundation. Great people and countries have lost their glory, prestige, and reputation because of the disappearance of Kshama. Without patience and the capacity for forbearance, one becomes spiritually weak. Such weakness leads to bad feelings, undesirable thoughts, and unbecoming actions. This virtue is best cultivated under adverse circumstances, and one must therefore gladly welcome troubles instead of regarding them as unwelcome. Thus times of distress, and an environment of sorrow and misery offer the ideal opportunity for the development of Kshama. However, because of mental weakness and ignorance, we shun painful experiences and distress. You should not be weak; be brave and welcome troubles. Let them come, more the merrier. Only with such a courageous attitude, you would be able to bring out the kshama hidden within you. (Divine Discourse, May 25, 2000.)
ஆன்மீக முன்னேற்றத்திற்கு '' க்ஷமாவே '' (சகிப்புத் தன்மையே) உண்மையான அடிப்படை அல்லது அஸ்திவாரமாகும். '' க்ஷமா '' மறைந்து விட்டதனால், தலை சிறந்த மனிதர்களும்,தேசங்களும் அவர்களது சிறப்பு, பெருமை மற்றும் புகழை இழந்து விட்டன. பொறுமையும், சகிப்புத் தன்மைக்கான திறனும் இல்லை என்றால், ஒருவர் ஆன்மீகத்தில் பலஹீனராகி விடுகிறார். இப்படிப் பட்ட பலஹீனம் கெட்ட உணர்வுகள்,விரும்பத் தகாத எண்ணங்கள் மற்றும் செய்யக் கூடாத செயல்களுக்கு இட்டுச் சென்று விடுகிறது. இந்த நல்லொழுக்கத்தை, பாதகமான சூழ்நிலைகளிலேயே நன்றாக வளர்த்துக் கொள்ள முடியும்; எனவே, ஒருவர், துன்பங்களை, வேண்டாதவைகளாகக் கருதாது, சந்தோஷமாக வரவேற்க வேண்டும். இவ்வாறு, துயரமான நேரங்கள் மற்றும் துக்கமும், துன்பமும் உள்ள சூழ்நிலைகள் '' க்ஷமாவை'' வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்புக்களை அளிக்கின்றன. ஆனால் பலஹீனமான மனப்பாங்கு மற்றும் அறியாமையின் காரணமாக, நாம் துன்பமான மற்றும் துயரமான அனுபவங்களை வெறுத்து ஒதுக்குகிறோம். நீங்கள் பலஹீனர்களாக இருத்தல் கூடாது; தைரியமாக இருந்து, துன்பங்களுக்கு வரவேற்பு அளியுங்கள். அவை வரட்டும் ; எவ்வளவு அதிகமோ அவ்வளவு நல்லது. இப்படிப் பட்ட தைரியமான மனப்பாங்கைக் கொண்டு தான் , நீங்கள் உங்களுள் மறைந்துள்ள '' க்ஷமாவை '' வெளிக் கொணர முடியும்.