azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of divine Love! As long as a person is conceited and egotistical, no one will like that person. Even their wedded spouse and their own children, though they may appear to respect them externally, will not be happy with an arrogant person. As long as one is filled with ego, one can never be really happy. Therefore, at the very outset, you should get rid of your ego(ahamkara).If one is filled with anger, one cannot experience joy(Krodham hithva na sochathi).Only when anger is subdued, happiness can be experienced. As long as one is filled with insatiable desires, one cannot feel really wealthy. The moment the person gives up desires, all riches will come to them. Till the moment a person is greedy, they will be a stranger to happiness. When you give up greed, you will feel endowed with all riches. (Divine Discourse, Aug 25, 1998.)
அன்பின் வடிவங்களே!இறுமாப்பும், அஹங்காரமும் ஒருவரிடம் இருக்கும் வரை எவரும் அவை விரும்ப மாட்டார்கள்.வெளியில் மரியாதை கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டாலும், அவரை மணந்த மனைவி மற்றும் அவரது சொந்த மக்கள், ஒரு திமிர் பிடித்த ஒருவருடன் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். ஒருவர் அஹங்காரத்தால் நிரம்பி இருக்கும் வரை, அவர் ஒருபோதும் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியாது.எனவே, முதன் முதலில் நீங்கள் உங்களது அஹங்காரத்தை விட்டு விட வேண்டும். ஒருவர் கோபத்தால் நிரம்பி இருந்தால், அவரால் ஒருபோதும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது ( க்ரோதம் ஹித்வா ந சோசதி). கோபத்தை அடக்கினால் தான், சந்தோஷத்தை உணர முடியும்.தணிக்க முடியாத ஆசைகள் உள்ளவரை ஒருவர் உண்மையிலேயே செல்வந்தராக உணர முடியாது. ஒருவர் ஆசைகளை எப்போது விட்டு விடுகிறாரோ, அந்தத் தருணத்திலேயே, அனைத்து செல்வங்களும் அவரை நாடி வரும்.ஒரு மனிதர் பேராசை கொண்டவராக இருக்கும் வரை, அவர் சந்தோஷத்திற்கு ஒரு அந்நியனாகவே இருப்பார். நீங்கள் பேராசையை விட்டு விடும் போது, உங்களுக்கே அனைத்து செல்வங்களும் வந்ததை உணர்வீர்கள்.