azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

You have to seek love only through love. TheGopikasprayed: “Oh Krishna, play Your sweet flute and sow the seeds of love in the desert of loveless hearts. Let the rain of love fall on earth and make the rivers of love flow.” The rivers of love must flow continuously. It is enough, if you can understand this one principle of love. This love is everything. Treat this love as the be-all and end-all of your life. Do not direct your love towards material objects. If you continue to love for love’s sake, then such a love will be eternal. It is not the body that is to be loved, but the principle of love. All the names and forms are evanescent and impermanent. Love directed towards temporary objects or beings is physical, whereas love for love’s sake is eternal. Love is God. You must attain Divinity with such love.(Divine Discourse, Oct 28, 2003.)
நீங்கள் அன்பை அன்பின் மூலமே நாட முடியும்.கோபிகைகள், ''ஓ!கிருஷ்ணா! உன்னுடைய இனிமையான புல்லாங்குழலை இசைத்து, அன்பற்ற பாலை வனங்களாக உள்ள இதயங்களில் அன்பின் விதைகளை விதைப்பாயாக. அன்பெனும் மழை பூமியில் பொழிந்து, அன்பின் ஆறுகள் கரை புரண்டு ஓடச் செய்யட்டும்.'' என பிரார்த்தித்தார்கள். அன்பின் ஆறுகள் இடையறாது ஓடிக் கொண்டே இருத்தல் வேண்டும். அன்பின் இந்த ஒரு கோட்பாட்டை நீங்கள் புரிந்து கொண்டாலே போதுமானது. இந்த அன்பு தான் எல்லாமே. இந்த அன்பையே உங்கள் வாழ்வின் அனைத்துமாகக் கருதுங்கள். உலகியலான பொருட்களின் மீது அன்பைச் செலுத்தாதீர்கள்.அன்பு செலுத்துவதை, அன்பிற்காகவே எனத் தொடர்வீர்களே ஆனால், பின்னர் அப்படிப் பட்ட அன்பு நிரந்தரமானதாக இருக்கும். நேசிக்கப் பட வேண்டியது உடலை அல்ல, அன்பின் தத்துவத்தையே. அனைத்து நாம, ரூபங்களும் மறையக்கூடியவை, நிலையற்றவை. தாற்காலிகமான பொருட்கள் அல்லது ஜீவராசிகளின் மீது செலுத்தப் படும் அன்பு உலகியலானது, ஆனால் அன்பிற்காகவே செலுத்தப் படும் அன்பு சாஸ்வதமானது.அன்பே இறைவன்.நீங்கள் இப்படிப் பட்ட அன்பின் மூலம் தெய்வீகத்தைப் பெற வேண்டும்.