azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

In order to save humanity, the Lord appeared in a most charming form, so that He could draw devotees’ hearts through Love. This is why He is called 'Raso vai sah' (He is sweetness itself). Krishna incarnated to establish Dharma. So what He likes most is Dharma. Walk in the path of Dharma; that is the worship He is pleased with. The Flute is His favourite. So like a flute, become hollow (devoid of desires) and straight (with no crookedness), and He will accept you. Think of the sublime sweetness that Krishna evoked in the hearts of those who had the good fortune to be His contemporaries! Every one, from the unlettered cowherd to the most profound scholar and sage, was drawn to Him; they held on to Him firmly in unshakeable devotion. Whatever be the hardships and troubles, they never gave up His Lotus Feet. Hold on to the Lord; that is the way to peace and joy. (Divine Discourse, 19-Aug-1968)
மனித குலத்தைக் காப்பதற்காக, இறைவன் மிகவும் வசீகரமான ஒரு உருவத்தில் , பக்தர்களின் இதயத்தை அன்பால் ஈர்ப்பதற்காக தோன்றினான். அதனால் தான் அவன் '' ரஸோவை ஸஹ '' ( அதாவது இனிமையே அவன் தான் ) என அழைக்கப் படுகிறான்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக அவதரித்தார்.எனவே, அவர் அதிகம் விரும்புவது தர்மத்தையே. தர்மத்தின் பாதையில் செல்லுங்கள்; அதுவே அவனுக்கு திருப்தி அளிக்கும் வழிபாடாகும்.அவனது புல்லாங்குழலே அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனவே, ஒரு புல்லாங்குழலைப் போல, வெற்றிடமாகவும் (ஆசைகள் இன்றியும் ),நேராகவும் ( நேர்மையுடனும் ) இருங்கள்; அவன் உங்களை ஏற்றுக் கொள்வான். அவனது சக காலத்தவர்களாக இருப்பதற்குக் கொடுத்து வைத்தவர்களின் இதயங்களில் அவன் எழுப்பிய இதமான இனிமையை எண்ணிப் பாருங்கள் !ஒவ்வொருவரும், படிப்பறிவு இல்லாத இடையர்களிலிருந்து,தலைசிறந்த பண்டிதர்கள் மற்றும் முனிவர்கள் வரை அனைவரும் அவன் பால் ஈர்க்கப் பட்டனர்; அவர்களும், அவனை, அசைக்க முடியாத பக்தியுடன் இறுகப் பற்றிக் கொண்டனர்.கஷ்டங்களும் ,துன்பங்களும் எதுவாக இருந்தாலும், அவனது பாத கமலங்களை அவர்கள் கை விடவே இல்லை. இறைவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்; அதுவே சாந்தி, சந்தோஷங்களுக்கான வழி.