azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers should regard their vocation as a sacred duty. They have the responsibility to mould the future generations of young students by what they teach, referencing practical examples from the lives of illustrious leaders. Teachers should inspire, and be an example by the way they live outside the classroom. Educational institutions have the responsibility to give to society well educated persons who are competent, who possess integrity and who can be relied upon to serve society with devotion and competence. What gives education its true value and significance is its moral and spiritual content. If teachers dedicate themselves to this noble cause, students will not go astray. I hope teachers will devote themselves to their duties with greater vigour and enthusiasm, and bring about a transformation in the students so that they become useful and worthy citizens. (Divine Discourse, Dec 15, 1985.)
ஆசிரியர்கள் தங்களது தொழிலை ஒரு புனிதமான கடமையாகக் கருத வேண்டும்.புகழ் வாய்ந்த தலைவர்களின் வாழ்க்கைகளிலிருந்து நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக் காட்டி, தாங்கள் கற்பிப்பவற்றால்,எதிர்கால இளைஞர் தலைமுறைகளை உருவாக்க வேண்டியதில் அவர்களுக்கு பொறுப்பு உள்ளது.வகுப்பறைகளுக்கு வெளியே அவர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதில் ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்து,ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். பக்தி மற்றும் செயல் திறனுடன் சமுதாயத்திற்கு சேவை ஆற்றுவதில் எவர் மீது நம்பிக்கை கொள்ள முடியுமோ,அப்படிப்பட்ட நன்கு கற்றறிந்து, திறமையும் நேர்மையும் கொண்டவர்களை ,சமுதாயத்திற்கு அளிப்பதில் கல்வி நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது.கல்விக்கு உண்மையான மதிப்பையும், முக்கியத்துவத்தையும் அளிப்பது, அதில் உள்ள ஒழுக்கம் மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளே.ஆசிரியர் இந்த சீரிய குறிக்கோளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்களேயானால், மாணவர்கள் வழி தவறிச் செல்ல மாட்டார்கள்.ஆசிரியர்கள் தங்களது கடமைகளில் அதிகமான உத்வேகம் மற்றும் உற்சாகத்துடன் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம், பயனும், மதிப்பும் உள்ள குடிமகன்களாக, அவர்கள் உருவாகுவதற்கான மாற்றத்தை, மாணவர்கள் இடையே கொண்டு வருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.