azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Virtues must be cultivated in each home; each member sharing in the joy with the rest, each one seeking for opportunities for helping others. This attitude must be stuck to, so that it may stay as character. How can a vessel kept with a closed lid be filled with water? It must be open to receive good impulses! In all your efforts, trust in a Higher Power which is ever ready to help you. Then your work is made easy. This comes out of devotion, and reliance on the Lord who is the source of all Power. When you travel by train, you only have to purchase the ticket, board the proper train and take a seat, you can leave the rest to the engine. Do you carry your luggage on your head? So too, trust in the Lord and march to the best of your ability. Have faith and earn the Lord’s grace by using the intelligence and the conscience He has endowed you with. (Divine Discourse, Sep 21, 1960.)
நல்லொழுக்கங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப் பட வேண்டும்; ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் தங்களது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டும், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்புக்களை நாடியும் இருத்தல் வேண்டும்.இந்த மனப்பாங்கு நன்றாகப் படிந்து அதுவே ஒருவரின் குண நலனாக ஆகி விட வேண்டும். மூடி வைக்கப் பட்டுள்ள பாத்திரத்தில் தண்ணீரை எப்படி நிரப்ப முடியும்? நல்ல உந்துதல்களை ஏற்றுக் கொள்ள அது திறந்து இருக்க வேண்டுமே ! உங்களது முயற்சி அனைத்திலும், மிக உயர்ந்த ஒரு சக்தி எப்போதும் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது என்பதில் முழு நம்பிக்கை வையுங்கள். பின்னர் உங்களது வேலை சுலபமானதாக ஆகி விடும்.இது பக்தியிலிருந்தும், அனைத்து சக்திக்கும் ஆதாரமான இறைவனைச் சார்ந்திருப்பதிலிருந்தும் வருகிறது. நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டிக்கட்டை வாங்கி, சரியான ரயிலில் ஏறி, ஒரு இருக்கையில் அமர வேண்டியது தான்; மற்றவற்றை எல்லாம் நீங்கள் எஞ்சினிடம் விட்டு விடலாம். உங்களது சாமான்களை எல்லாம் நீங்கள் தலையிலா சுமந்து கொண்டு செல்கிறீர்கள்? அதைப் போலவே, இறைவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு, உங்களது முழுத் திறமைக்கு ஏற்றவாறு முன்னேறுங்கள். நம்பிக்கையுடன், அவன் உங்களுக்கு அளித்துள்ள புத்தி மற்றும் மனச் சாட்சியைப் பயன்படுத்தி அவனது அருளைப் பெறுங்கள்.