azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Truth (Satya) sustains the cosmos, virtue (Dharma) protects and promotes the peace of mankind. All activities must be infused with the ideals of Satya and Dharma. Dharma never suffers decline; only its practice declines. So divine incarnations take place to restore faith in Dharma, to revitalise its practice and to demonstrate that the practice of Dharma confers peace, joy and prosperity. If Dharma is ignored, it amounts to sacrilege, for Dharma is God and God is Righteousness (Dharma). People see God in a picture, an icon, or a plaster of Paris figurine but God really is most manifest in a righteous action (Dharma). One may spend enormous sums for pilgrimages and for rituals and ceremonies but that will not take them anywhere nearer to God. What profit can one earn in the spiritual field, if they adore God and at the same time, insult and injure their fellowmen? (Divine Discourse, Jun 21, 1979.)
சத்யம் இந்த பிரபஞ்சத்தைத் தாங்குகிறது; தர்மம் இதைக் காத்து மனித குலத்தின் சாந்தியை வளர்க்கிறது.அனைத்து செயல்களும் சத்யம் மற்றும் தர்மத்தின் இலட்சியங்களில் தோய்ந்திருக்க வேண்டும்.தர்மம் எப்போதும் வீழ்ச்சி அடைவதில்லை; அதைக் கடைப்பிடிப்பது மட்டுமே குறைந்து விடுகிறது. எனவே தான் தெய்வீக அவதாரங்கள் தோன்றி,தர்மத்தின் மீது நம்பிக்கையை நிலை நாட்டி, அதைக் கடைப்பிடிப்பதற்கு புத்துயிர் அளித்து, தர்மத்தைக் கடைப்பிடிப்பது சாந்தி,சந்தோஷம் மற்றும் சௌபாக்கியத்தை அளிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றனர். தர்மத்தை அலட்சியப் படுத்துவது தெய்வீகத்தையே அவமதிப்பதாகும்; ஏனெனில் தர்மமே கடவுள், கடவுளே தர்மம்.மனிதர்கள் இறைவனை ஒரு படத்தில்,ஒரு சின்னத்தில் அல்லது ஒரு விக்ரஹத்தில் காண்கிறார்கள்; ஆனால் கடவுள் உண்மையிலேயே அதிகமாக வெளிப்படுவது ஒரு தார்மீகச் செயலிலேயே. ஒருவர் மிக அபரிமிதமான பணத்தை தீர்த்த யாத்திரைகள்,சடங்குகள் மற்றும் சிரார்த்தங்களில் செலவழிக்கலாம், ஆனால் அவை எல்லாம் அவரை இறைவனருகில் இம்மியளவு கூட இட்டுச் செல்லாது. இறைவனைப் போற்றி வழிபட்டுக் கொண்டே, அதே சமயம் தனது சக மனிதர்களை அவமதித்து, காயப்படுத்தும் ஒருவர் தனது ஆன்மீகத் துறையில் என்ன லாபத்தை ஈட்ட முடியும்?