azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

When you eat a banana, you have to first remove the skin; so it is with other fruits as well be it a mango or an orange. The sweet substance has to be reached after removal of the bitter skin. For Emperor Bali to be received and accepted by God, the bitter cover of egoism and power-mania had to be removed. Ignorance, maya (delusion), illusion, pride, etc. are the components of the skin. The festival of Onam comes and goes, but you are no way nearer to God. This is because while Onam is thoroughly welcomed and enjoyed, generosity, renunciation, love and the spirit of service are not given an equally hearty welcome. Take this as the Onam Message - strive to manifest, cultivate and express Love, suppressing pride and egoism, so that you win the Grace of God. (Divine Discourse, Aug 30, 1974.)
நீங்கள் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது, முதலில் அதன் தோலை நீக்க வேண்டும்;ஒரு ஆரஞ்சோ அல்லது மாம்பழமோ அல்லது வேறு பழமாக இருந்தாலும் அதே தான். கசப்பான தோலை எடுத்த பின்பே இனிமையான பொருளை அடைய முடியும். மஹா பலிச் சக்ரவர்த்தியை இறைவன் வரவேற்று ஏற்றுக் கொள்வதற்கு முன், கசப்பான அஹங்காரம் மற்றும் பதவி வெறியை நீக்க வேண்டி வந்தது. அஞ்ஞானம்,மாயை,மருட்சி,தற்பெருமை ஆகியவை இந்தத் தோலின் அங்கங்கள்.ஓணம் பண்டிகை வருகிறது ,போகிறது,ஆனால் நீங்கள் இறைவனது அருகாமையிலேயை இல்லை.ஏனெனில் ஓணம் பண்டிகையை முழுவதுமாக வரவேற்று அனுபவித்தாலும், தாராள மனம், பற்றின்மை,அன்பு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றிற்கு அதே அளவு சமமான இதயபூர்வ வரவேற்பு இல்லை. இறைவனது அருளைப் பெறுவதற்கு, அஹங்காரம் மற்றும் தற்பெருமையை அடக்கி, அன்பை வெளிப்படுத்தி, வளர்த்து, காட்டுவதற்குப் பாடுபடுங்கள் - இதையே இந்த ஓணத்தின் அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள்.