azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Beautiful fields and groves run wild with neglect and soon become unrecognizable bushland and thorny jungle; fine trees are hewn by greedy men and the shape of the landscape is changed. With the passage of time, people get accustomed to the new state of things. This has happened toDharmaalso. Misunderstood by incompetent intelligence, unbridled emotion and impure reasoning, the scriptures have been grossly diluted and their glory has suffered grievously. Just as the raindrops from the clear blue sky get colored and contaminated when they fall on the soil, the unsullied message of the ancientrishis,the example of their shining deeds, and the bright untarnished urges behind their actions are all turned into ugly caricatures of the original grandeur, by uncultured interpreters and scholars. Hence, every one of you must acquaint yourselves with the outlines ofDharma,expounded in theVedas,Sastrasand thePuranas.(Dharma Vahini, Ch 1.)
அழகான தோட்டங்களும், தோப்புக்களும் பராமரிப்பு இல்லை எனில் கட்டுப்பாடு இன்றி வளர்ந்து, வெகு விரைவில் இனம் கண்டு கொள்ள முடியாத புதர்களாகவும்,முள் நிறைந்த காடுகளாகவும் ஆகி விடுகின்றன; சிறந்த மரங்கள் பேராசை கொண்ட மனிதர்களால் வெட்டப் பட்டு, இயற்கையான நிலத்தின் வடிவமே மாறி விடுகிறது. காலம் போகப் போக, மனிதர்கள் இந்த புதிய நிலைக்குப் பழக்கமாகி விடுகிறார்கள். இது தர்மத்திற்கும் நிகழ்ந்துள்ளது. தகுதியற்ற புத்தி, கட்டுப்பாடற்ற உணர்வுகள், தூய்மையற்ற வாதங்களின் மூலம் சாஸ்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு, மதிப்பற்றவைகளாக ஆக்கப் பட்டு, பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டன. எவ்வாறு தெளிவான நீல வானத்திலிருந்து விழும் மழை நீர்த்துளிகள், நிலத்தில் விழும்போது, கலங்கி மாசடைந்து விடுகின்றனவோ, அவ்வாறே,பண்டைய முனிவர்களின் களங்கமற்ற போதனைகளும்,அவர்களது ஒளிர் மிக்க செயல்களின் உதாரணங்களும்,அவர்களது செயல்களுக்கு பின்னால் இருந்த , மாசற்ற உந்துதல்களும், கலாசாரமற்ற பண்டிதர்களால் அவற்றின் இயல்பான மேன்மையிலிருந்து மாற்றி அருவருப்பானவைகளாக சித்தரிக்கப் பட்டு விட்டன. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள் போதிக்கும், தர்மத்தின் விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.