azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

You are not a despicable creature, born in slime or sin, to eke out a drab existence and be extinguished forever. You are immortal and eternal. So when the call comes, respond with your whole heart. The Principle of Divinity must be experienced, for it is beyond expressions and explanation. The richness, fullness and depth of that experience can never be communicated in words. You must feel that it is your highest destiny to attain that experience. You are a mixture ofDehaandDeva- the mortal and the immortal. Liberation means stoppage of grief and acquisition of joy. All that you have to do is to place all your burdens on God. It makes you care-free and grief-free. Then you will take everything as a divine play of the Lord you love and live in bliss just as He is, when His plans are going through! (Divine Discourse, Feb 11, 1964.)
நீங்கள் ஏதோ சேற்றிலோ அல்லது பாவத்திலோ பிறந்து,சலிப்பான வாழ்க்கையை நடத்தி, நிரந்தரமாக அழிக்கப் படும், அருவருக்கத் தக்க ஒரு ஜந்து அல்ல. நீங்கள் அமரரும் சாஸ்வதமானவரும் ஆவீர்கள்.எனவே, அழைப்பு வரும்போது,இதய பூர்வமாக பதிலளியுங்கள்.தெய்வீக தத்துவத்தை அனுபவித்துத் தான் உணர வேண்டும், ஏனெனில்,அது வர்ணனைகளுக்கும், விவரிப்புக்களுக்கும் அப்பாற்பட்டது.அந்த அனுபவத்தின் வளம், பரிபூரணத்துவம் மற்றும் ஆழத்தை வார்த்தைகளால் ஒரு போதும் விவரிக்க இயலாது. அந்த அனுபவத்தைப் பெறுவதே, உங்களது தலையாய விதி என்பதை நீங்கள் கட்டாயம் உணர வேண்டும்.நீங்கள் தேஹமும், தேவனும் - அழியப்போவதும், அழிவற்றதும், இணைந்த ஒரு கலவை. மோக்ஷம் என்றால் துக்கத்தைத் தடுத்து, ஆனந்தத்தைப் பெறுவது எனப் பொருள்.நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் சுமைகள் அனைத்தையும் இறைவன் மீது இறக்கி வைத்து விடுவதே ஆகும்.அது உங்களை கவலை அற்றதாகவும், துக்கமற்றதாகவும் ஆக்கி விடும். பின்னர் நீங்கள் அனைத்தையும் நீங்கள் நேசிக்கும் இறைவனின் லீலையாக எடுத்துக் கொள்வீர்கள்; அவனது ஸங்கல்பங்கள் நிறைவேறும்போது, அவன் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறானோ, அவ்வாறே நீங்களும் ஆனந்தத்தில் வாழ்வீர்கள் !