azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

"Sacrifice ignorance(ajnana)and ego(ahamkara)at the altar of wisdom(Jnana),and install righteousness(Dharma)therein" - this is the message of the scriptures. Every single unselfish act, which prepares the ground for the merging of the Soul with the Over-Soul, which broadens the vision towards the Divinity immanent everywhere, is a righteous act. Each such act is a tiny stream that swells the river of holiness rushing towards the sea of knowledge of Divinity. Your acts and activities are all rituals in the worship of theParamatmathat pervades the Universe. Whatever is done in an attitude of dedication and surrender is a component of theDharma,which leads to Realisation. The strategy of the ancientBharathiya(Indian) way of life is directed towards the sanctification of every moment and every word, thought and deed as a step towards realising the Divine. (Dharma Vahini, Ch 1.)
''அஞ்ஞானத்தையும், அஹங்காரத்தையும், ஞானத்தின் சன்னிதியில் தியாகம் செய்து தர்மத்தை பிரதிஷ்டை செய்யுங்கள் '' -இதுவே வேதங்களின் உபதேசமாகும். ஆத்மாவை, பரமாத்மாவுடன் ஒன்றரக் கலப்பதற்காகத் தயார் செய்து, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் தெய்வீகத்தைப் பற்றிய திருஷ்ட்டியை விசாலப்படுத்தும் எந்த ஒரு தன்னலமற்ற செயலும் ஒரு தார்மீகமான செயலே. இப்படிப் பட்ட ஒவ்வொரு செயலும், தெய்வீகத்தைப் பற்றிய ஞானம் எனும் கடலை நோக்கிப் பாயும் புனிதத்துவம் என்ற நதியின் ப்ரவாஹத்தை அதிகரிக்கும் ஒரு சிறு நீரோட்டமாகும். உங்களது செயல்கள் மற்றும் செய்கைகள் அனைத்தும், இந்த ப்ரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் பரமாத்மாவை வழிபடுவதற்கான சடங்குகளே. அர்ப்பணிப்பு மற்றும் சரணாகதி உணர்வுடன் செய்யப் படும் எதுவும், தன்னை உணர்வதற்கு இட்டுச் செல்லும் தர்மத்தின் ஒரு அங்கமே. ஒவ்வொரு தருணம்,ஒவ்வொரு வார்த்தை,எண்ணம் மற்றும் செயலை, தெய்வீகத்தை உணருவதற்கான பாதையின் ஒரு படியாகக் கருதி, அவற்றை புனிதப் படுத்துவதற்காக, வாழ்க்கையை இட்டுச் செல்வதே பண்டைய பாரதத்தினரின் செயல் திட்டமாக இருந்தது.