azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Whoever subdues egoism, conquers selfish desires, destroy one’s bestial feelings and impulses, and gives up the natural tendency to regard the body as the Self, is surely on the path ofDharma;they know that the goal ofDharmais the merging of the wave in the sea! In all worldly activities, you should be careful not to offend propriety, or the canons of good nature; you should not play false to the promptings of the Inner Voice, you should be prepared at all times to respect the appropriate dictates of conscience; you should watch your steps to see whether you are in someone else's way; you must be ever vigilant to discover the Truth behind all this scintillating variety. This is your duty, yourDharma.The blazing fire ofJnana,which convinces you that all this isBrahman (Sarvam Khalvidam Brahma)will consume into ashes all traces of your egoism, and worldly attachment. (Dharma Vahini, Ch 1.)
எவர் ஒருவர் தனது அஹங்காரத்தை அடக்கி,சுயநலமான ஆசைகைள வென்று, விலங்கியலான உணர்வுகள் மற்றும் உந்துதல்களை அழித்து, தனது உடலையே ஆத்மாவாகக் கருதும் இயல்பான மனப்போக்கை விட்டு விடுகிறாரோ, அவர் கண்டிப்பாக தர்மத்தின் பாதையில் இருக்கிறார் எனலாம்; தர்மத்தின் குறிக் கோள் அலைகள் கடலுடன் ஒன்றரக் கலப்பதே என்பதை அவர்கள் அறிவார்கள் ! உலகியலான செயல்களில், நீங்கள் நல்ல தன்மையின் கோட்பாடுகளை அவமதிக்காமல் இருப்பதில் கவனமாக இருத்தல் வேண்டும்; அந்தராத்மாவின் உந்துதல்களுக்கு எதிராக நடத்தல் கூடாது; மனச்சாட்சியின் தகுந்த கட்டளைகளை எல்லாக் காலங்களிலும் மதித்து நடக்க வேண்டும்; நீங்கள் மற்றவர்களின் வழியில் இடையூறாக இருக்கிறீர்களா என்பதைக் கவனிக்க வேண்டும்; கண்களை மயக்கும் இந்த வண்ண ஜாலமான வேற்றுமைகள் எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் சத்தியத்தைக் கண்டு கொள்வதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இதுவே உங்கள் கடமை, உங்கள் தர்மம். இவை அனைத்தும் பரப்ரம்மனே ( ஸர்வம் கல்விதம் ப்ரம்மா) என உங்களை ஏற்றுக் கொள்ள வைக்கும், கொழுந்து விட்டு எரியும் ஞானத்தின் ஜ்வாலை, உங்களது அஹங்காரம் மற்றும் உலகியலான பற்றுதல்களின் சுவடுகளைக் கூட எரித்துச் சாம்பலாக்கி விடும்.