azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

You must dedicate yourself to right conduct(Dharma)and always be engaged in righteousness(Dharma).Then you will live in peace and the world will enjoy peace. No one can acquire real peace, nor can they win the grace of the Lord through any means other than right conduct. Dharma is the foundation for the welfare of humanity; it is the only unchanging truth across all times. WhenDharmafails to transform human life, the world will be afflicted by agony and fear, tormented by stormy revolutions. When the effulgence ofDharmafails to illumine human relationships, people will be shrouded in sorrow. All religions and scriptures expoundDharmaand proclaim aloud the Glory of Dharma. The stream ofDharmicactivity should never run dry; when its cool waters cease to flow, disaster is certain. God is the embodiment of Dharma; His Grace is won byDharma. (Dharma Vahini, Ch 1.)
நீங்கள் உங்களை தர்மத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டு, எப்போதும், தார்மீக காரியங்களிலேயே ஈடுபட்டு இருத்தல் வேண்டும். பின்னர் நீங்கள் சாந்தியுடன் இருப்பீர்கள்; இந்த உலகமும் சாந்தியை அனுபவிக்கும். தார்மீகமான நடத்தையினால் அன்றி, வேறு எந்த வழியிலும், எவரும் உண்மையான சந்தியைப் பெறவோ, இறைவனது அருளைப் பெறவோ இயலாது.தர்மமே மனித குலத்தின் க்ஷேமத்தின் அஸ்திவாரம்; எக்காலத்திலும் மாறாத நித்ய சத்யம் தர்மமே.எப்போது தர்மம் மனித வாழ்க்கையை சீரமைக்கத் தவறுகிறதோ,இந்த உலகம் வேதனையாலும், அச்சத்தாலும் பீடிக்கப் பட்டு, கொந்தளிப்பான புரட்சிகளால் துன்புறுத்தப் படும்.எப்போது தர்மத்தின் காந்தி மனித உறவுகளை ஒளி பெறச் செய்யத் தவறுகிறதோ, மனிதர்கள் சோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.அனைத்து மதங்களும், சாஸ்திரங்களும் தர்மத்தை அறிவுறுத்தி, அதன் பெருமையைப் உரக்கப் பறைசாற்றுகின்றன.தார்மீகமான செயல்களின் நீரோட்டம் ஒரு போதும் வற்றக் கூடாது;அதன் குளிர்ந்த நீரோட்டம் ஓடாமல் நின்று விட்டால், பேரழிவு நிச்சயம்.இறைவன் தர்மஸ்வரூபன்;அவன் அருளை தர்மத்தால் பெற்றிட முடியும்.