azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Prema(pure love) is filial piety when directed towards parents, companionship when it flows towards friends, love when it is felt towards the partner, respect when it is expressed to elders, and affection when you are drawn towards children.Bhakthi(devotion) affects your acts in three forms: first, you do some acts consciously in order to express your love or give shape to thePremathat animates you; second, you do acts as dedicated offerings to enhance the glory of the Lord, in a spirit of worshipful humility, as if you are offering at His feet all that you are and all that you are capable of; and third you do acts which are full ofPrematowards all, as part of your mere existence, automatically, without any tinge of violence upsetting the perfume of the act. One dedicated act leads on to all activity being dedicated; theAanandayou experience makes you feel that your effort has been worthwhile. That is the end, the aim and the inspiration. (Divine Discourse, Sep 29, 1960.)
ப்ரேமை பெற்றோர்களின் மீது செலுத்தப் படும் போது நல்ல பிள்ளையின் பக்தியாகிறது; நண்பர்கள் பால் செலுத்தப் படும்போது நட்புணர்வாகிறது; துணைவரிடம் அது அன்பாகிறது; பெரியோர்களிடம் அது மரியாதையாகவும், குழந்தைகளின் பால் அது பாசமாகவும் ஆகி விடுகிறது. பக்தி உங்களது செயல்களில் மூன்று விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது ; முதலில் உங்களை உந்தும் ப்ரேமைக்கு ஒரு வடிவம் தரவோ அல்லது உங்களது அன்பை வெளிப்படுத்தவோ,சில காரியங்களை வேண்டும் என்றே செய்கிறீர்கள் ;சில செயல்களை, இறைவனது மாட்சிமையை மேம்படுத்தும் வண்ணம், பிரார்த்தனையின் பணிவு உணர்வுடன், உங்களது அனைத்தையும், உங்களால் முடிந்த அனைத்தையும் காணிக்கையைப் போல, இறைவனது பாதார விந்தங்களில் அர்ப்பணிப்பாகச் செய்கிறீர்கள்; மூன்றாவதாக, அனைவரிடம் ப்ரேமை நிறைந்ததான செயல்களை, உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும், தானே முன் வந்தும், எந்த விதமான வன்முறையின் சாயல்கூட அந்தச் செயல்களை ஆற்றும் போது பாதிக்காதவாறும் நீங்கள் ஆற்றுகிறீர்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றப் படும் ஒரு செயல், அனைத்து செயல்களையும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டதாக ஆக்கி விடுகிறது; நீங்கள் அனுபவிக்கும் ஆனந்தம், நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனுள்ளவையே என்ற உணர்வை உங்களுக்கு அளிக்கிறது.அதுவே முடிவும்,குறிக்கோளும், உந்துதலும் ஆகும்.