azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

In the world, you will easily see examples of how some families prospered because of unity and others suffered because of divisions within the family. Today the Universe desperately needs unity. It is through faith in God that unity can be promoted. Look at the diversity of people in the halls of Puttaparthi! People come from different creeds, nationalities and culture, but all are united in their common allegiance to Bhagawan. By this single feeling of faith in the Divine, unity is achieved. All of you are embodiments of the Divine. You are embodiments of love and peace, of Divinity; develop this strong conviction. With the power of the Divine to nurture you there is nothing you cannot accomplish. Karna and Ravana are examples of powerful men who were destroyed because they did not have the power of the Divine. The Pandavas were saved because of their faith in the Divine and their unity. (Divine Discourse, 1 Jan 1996.)
இந்த உலகில் எவ்வாறு சில குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்ததனால் மேன்மை அடைந்ததையும்,மற்றவர்கள் குடும்பத்தில் இருந்த பிளவுகளினால் துன்பத்தில் ஆழ்ந்ததையும் நீங்கள் எளிதாகக் காணலாம். இன்று இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒற்றுமை மிகவும் தேவையாக இருக்கிறது.இறைவன் பால் கொள்ளும் நம்பிக்கையின் மூலம் ஒற்றுமையை வளர்க்க முடியும். புட்டபர்த்தியில் மண்டபத்தில் உள்ள மக்களின் வித்தியாசங்களைப் பாருங்கள்! மனிதர்கள் பல குலங்களிலிருந்தும்,தேசங்கள் மற்றும் கலாசாரங்களிலிருந்தும் வந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் பகவானின் மீது உள்ள பொதுவான பற்றுதலினால் ஒற்றுமையாக உள்ளனர். இந்த ஒருமித்த இறை நம்பிக்கையின் காரணமாக ஒற்றுமையைப் பெற முடிகிறது. நீங்கள் அனைவருமே தெய்வீகத்தின் திரு உருவங்களே.நீங்கள் அன்பு மற்றும் சாந்தி,தெய்வீகம் ஆகியவற்றின் திருவுருவங்களே; இந்த வலுவான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பேணிக்காக்கும் தெய்வீக சக்தியைக் கொண்டு,உங்களால் சாதிக்க முடியாது என்று எதுவுமே இல்லை. கர்ணணும்,இராவணணும்,இந்த தெய்வீக சக்தி இல்லாததால் அழிந்த, சக்தி வாய்ந்தவர்களுக்கு உதாரணங்கள். பாண்டவர்கள் ,அவர்களுக்கு தெய்வீகம் மற்றும் ஒற்றுமையில் இருந்த நம்பிக்கையின் காரணமாகவே காக்கப் பட்டார்கள்.