azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The road laid out by holy people has to be repaired now and then, either by those who travel through it or by those who claim authority over it. That is what is called ‘teaching(bodha)’. It is for the sake of such repairs that the Lord occasionally sends some authorised individuals, sages, and divine people. Through their good teachings, the path opened by the God-people of the past is again made clear and smooth. But how is one to know the consequence of the soul’s yearning for the Lord’s Advent? Since this can’t be known, one has to pray until the world is established in happiness. The happiness of the world is the sign of His arrival; if this is understood, then it is easy to recognise theAvatarimmediately. It is then that the religion of truth(sathya),of compassion(daya),of spiritual wisdom(jnana)and of love(prema)will grow and prosper. So until these are firmly rooted, people must continue their prayers. That is the responsibility of the people. (Prema Vahini, Ch 70.)
அதன் மீது அதிகாரம் உள்ளவர்கள் அல்லது அதில் பயணிப்பவர்கள் மூலம், புனிதமானவர்கள் அமைத்துத் தந்த பாதையை அவ்வப்போது செப்பனிட வேண்டும்.இதைத் தான் '' போதனைகள்'' என்பார்கள்.இப்படிப் பட்ட பழுது பார்ப்பதற்குத் தான் இறைவன் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட மனிதர்கள், இறைத் தூதர்கள் அல்லது தெய்வீக மனிதர்களை அனுப்புகிறான். அவர்களது நல்ல போதனைகளால்,கடந்த காலத்தில் இறைத் தூதர்கள் ஆரம்பித்து வைத்த பாதை மறுபடியும்,தெளிவாக்கப் பட்டு,இதமாக்கப் படுகிறது. இறைவன் அவதரிக்க வேண்டும் என்று ஒரு ஆத்மா ஏங்குவதன் விளைவினை ஒருவர் எவ்வாறு தெரிந்து கொள்வது?இதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதால், இந்த உலகில் சந்தோஷம் நிலைபெறும் வரை ஒருவர் காத்திருக்க வேண்டும்.இந்த உலகின் சந்தோஷமே அவன் அவதாரம் எடுத்து வந்து விட்டான் என்பதன் அறிகுறியாகும் ; இது புரிந்து விட்டால் அவதாரத்தை உடனே இனம் கண்டு கொள்வது எளிதாகி விடுகிறது.இதன் பிறகே, சத்யம்,தயை,ஞானம் மற்றும் ப்ரேமை ஆகியவற்றின் மதம் வளர்ந்து, வளம் பெறும்.இவை உறுதியாக நிலை கொள்ளும் வரை மனிதர்கள் தங்களது பிரார்த்தனையைத் தொடர வேண்டும்.அதுவே மக்களின் கடமையும் ஆகும்.