azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 17 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 17 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Police and law-makers can defeat only external foes; they have no power to destroy internal enemies. They will find the task impossible, for they are not the authorities for that. The internal foes, six enemies(arishadvarga)that operate within a person, can be uprooted only with the teachings of great saints, love for God, and the company of the noble and holy. The world suffers harm at the hands of wicked people when the law-makers responsible for apprehending thieves themselves become entangled with them. Equally, the world becomes enveloped in darker ignorance when righteousness(dharma)is destroyed and those contemplating on theBrahmanincessantly and the ‘great’ spiritual aspirants give up the path of well-being of the world and become victims of sense enjoyment or ambition to earn name and fame. Then suffering will increase every single day. The whole world will bask in peace and joy only when everyone — leaders of countries and spiritual aspirants alike — realize the righteous path and ponder the omnipotence of the Lord. (Prema Vahini, Ch 69.)
காவல் துறை மற்றும் சட்டத் துறையினர் வெளிப்படையான எதிரிகளை வெல்ல முடியும்;உள்ளார்ந்த எதிரிகளை அழிக்க அவர்களுக்கு சக்தி கிடையாது.இந்தப் பணி இயலாத ஒன்றாக அவர்களுக்கு இருக்கும் ஏனெனில் அதற்கான அதிகாரிகள் அவர்கள் அல்ல.ஒரு மனிதருள் இருக்கும் உள்ளார்ந்த எதிரிகளை (காம,க்ரோத,லோப, மோஹ, மத,மாத்ஸர்யங்கள்) தலை சிறந்த முனிவர்களின் போதனைகள், இறைவன் பால் அன்பு,சீரிய மற்றும் புனிதமானவர்களுடன் கொள்ளும் நட்பு ஆகியவற்றின் மூலமே வேரோடு களைய முடியும்.இந்த உலகம் தீயவர்களின் கையில் துன்புறுவதற்குக் காரணம்,திருடர்களைப் பிடிக்க வேண்டிய சட்டத் துறையினரே அவர்களுடன் பிணைந்திருப்பதே ஆகும்.இதே போன்று,தர்மம் அழிக்கப் படும்போதும், இடையறாது பரப்ரம்மனை தியானிப்பவரும்,தலைசிறந்த ஆன்மீக சாதகர்களும், உலகின் க்ஷேமத்தை நாடுவதை விட்டு விட்டு, புலனின்பங்களுக்கோ அல்லது பெயர் மற்றும் புகழை அடைய வேண்டும் என்ற தாபத்திற்கோ இறையாகி விடும் போதும் இந்த உலகம் அறியாமை எனும் இருளால் சூழப்பட்டு விடுகிறது.பின்னர் துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.ஒவ்வொருவரும்--உலகத் தலைவர்களும் ஆன்மீக சாதகர்களும் ஒன்று போல,தர்மத்தின் பாதையை உணர்ந்து, இறைவனின் ஸர்வ வல்லமையை சிந்திக்கும் போது தான், இந்த உலகனைத்தும் சாந்தி , சந்தோஷங்களில் திளைத்திருக்கும்.