azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Those who yearn to establish themselves in contemplation of Divinity must seek solitude, practice meditation and repeat Lord's name at specified times, and acquire one-pointedness through spiritual exercises. They must always be anxious to do deeds that will bring about the welfare of all beings. They must always be engaged in performing work without any concern for the fruit thereof. Sacrifice your selfish needs. Your desire should be to establish the welfare of the world. Let there be constant effort to do good to others. With all these feelings filling the heart, meditate on the Lord. This is the right path. If everyone is thus engaged in the service of humanity and in promoting the welfare of the world, the thieves of passion, hatred, pride, envy, jealousy, and conceit won't invade people's minds and divine possessions, like dharma, mercy, truth, love, knowledge, and wisdom, will be safe from harm.(Prema Vahini, Ch 68.)
இறை வழிபாட்டில் ஈடுபட விழைபவர்கள், தனிமையை நாடி, தியானத்தைக் கடைப்பிடித்து,குறிப்பிட்ட நேரங்களில் இறை நாமஸ்மரணை செய்து,ஆன்மீக சாதனைகளின் மூலம் ஒரு முகத் தன்மையைப் பெற வேண்டும்.அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நலன் பயக்கும் காரியங்களைச் செய்வதில்,அவர்கள் எப்போதும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.அவர்கள் எப்போதும் பிரதிபலனை எதிர் பார்க்காது செயலாற்றுவதில் ஈடுபட்டு இருக்க வேண்டும். உங்களது சுயநலமான தேவைகளைத் தியாகம் செய்யுங்கள்.அனைத்து உலகின் நலனை நிலைநாட்டுவதே உங்களது விருப்பமாக இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்வதிலேயே, உங்களது இடையறாத முயற்சி இருக்கட்டும். இந்த அனைத்து உணர்வுகளால் நிரம்பிய இதயத்துடன் இறைவனை தியானியுங்கள். இதுவே சரியான வழியாகும். ஒவ்வொருவரும் இவ்வாறு மனித குலத்திற்கு சேவை ஆற்றுவதிலும், உலக நன்மையைப் பேணுவதிலும் ஈடுபடுவார்களேயானால்,காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்ற திருடர்கள் மனித மனங்களை ஆக்ரமிக்க முடியாது;தெய்வீக குணங்களான தர்மம், கருணை, சத்யம்,அன்பு,அறிவு மற்றும் ஞானம் ஆகியவை தீமைகளிலிருந்து பாதுகாக்கப் படும்.