azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

People driving cars concentrate on the road, for they are anxious to save themselves and others from accidents. Fear is what induces single-mindedness here. But Love is a greater force for achieving concentration. If you have steady and resolute love, concentration becomes intense and unshakeable. Faith develops into love, and love results in concentration. And under these conditions, prayer begins to yield fruit. Pray keeping all the waves of the mind stilled. Pray, as the performance of a duty for your very real existence, as the only justification for your coming into the world as a human. Narayana is the Lord of the Water (naarammeans water). But what is the water of which He is the Lord of? He resides in the heart, and His presence when recognised melts even the stoniest heart, and water emanates from the eye as tears of joy, gratitude, and fullness! The function of your tears is not to weep like a fool or a coward but to express internal joy. (Divine Discourse, Nov 23, 1961.)
கார்களை ஓட்டுபவர்கள், தங்களையும் பிறரையும், விபத்துக்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்ற கவலையால்,பாதையில் கவனம் செலுத்துகிறார்கள்.அச்சமே ஒருமித்த மனக்குவிப்பை இங்கு ஏற்படுத்துகிறது. ஆனால் அன்பு மனக்குவிப்பைப் பெறுவதற்கான மிகச் சிறந்த சக்தியாகும்.உங்களுக்கு நிலையான மற்றும் உறுதியான அன்பு இருக்குமானால், மனக்குவிப்பு என்பது தீவிரமானதாகவும்,அசைக்க முடியாததாகவும் இருக்கும்.நம்பிக்கை அன்பாக உருவாகி,அன்பு மனக்குவிப்பாக முடிகிறது.இப்படிப் பட்ட சூழ்நிலையில் பிரார்த்தனை பலன்களை அளிக்கிறது.மனதின் அனைத்து அலைகளையும் அசைவற்றதாக ஆக்கிக் கொண்டு பிரார்த்தியுங்கள்.நீங்கள் உண்மையில் உயிர் வாழ்வதற்காக ஆற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ,இந்த உலகில் நீங்கள் ஒரு மனிதனாக வந்திருப்பதன் ஒரே நோக்கம் அது மட்டுமே என்பதற்காகவும் , பிரார்த்தனை செய்யுங்கள். நாராயணன் என்றால், நீரின் அதிபதி என்று பொருள்.( நரம் என்றால் நீர்). அவன் எந்த நீரின் அதிபதி? அவன் ஹ்ருதய வாஸி,அவனது இருக்கையை உணர்ந்து விட்டால், அதுவே எப்படிப் பட்ட கல் இதயத்தையும் கூட உருக்கி விடும்;அதுவே கண்களில் இருந்து ஆனந்தம்,நன்றியுணர்வு மற்றும் பரிபூரணத்துவத்தின் கண்ணீராக வெளிப்படும் ! உங்களது இந்தக் கண்ணீரின் வேலை ஒரு மடையனை அல்லது கோழையைப் போல அழுவதற்காக அல்ல;ஆனால் உள்ளார்ந்த ஆனந்தத்தை வெளிப் படுத்துவதற்காகவே.