azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The spiritual aspirant should note the distinction between the conduct of the ordinary(sahaja)person and the spiritual aspirant. Rice in its natural state and boiled rice —can these two be the same? The hardness of natural rice is absent in the boiled one. The boiled grain is soft, harmless, and sweet. The unboiled grain is hard, conceited, and full of delusion. Similarly both types of individuals are souls(jivis)and humans, no doubt, but those immersed in external or multiplicity based illusions(avidya-maya)are ‘people’, while those immersed in internal or knowledge based illusions(vidya-maya)are ‘spiritual aspirants’. Though the Lord is situated in every heart, spiritual practice is necessary so that they may discover it for themselves, right? It isn’t possible for us to see our own face! We need a mirror! So too, a basic path, a spiritual practice, is necessary. (Prema Vahini Ch 59)
ஆன்மீக சாதகர், ஒரு சாதாரண மனிதர் மற்றும் ஒரு ஆன்மீக சாதகரின் நடத்தையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.சாதாரண அரிசியும், கொதிக்க வைக்கப் பட்ட அரிசியும் ஒன்றாகுமா?சாதாரண அரிசியின் கெட்டித் தன்மை, சமைக்கப் பட்ட அரிசியில் இருக்காது.சமைக்கப் பட்ட அரிசி மிருதுவாகவும், இதமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். சமைக்கப் படாத அரிசி கடினமானதாகவும்,அகந்தை கொண்டதாகவும், மாயையில் மூழ்கியதாகவும் இருக்கும்.அதைப் போலவே, இருவரும் சந்தேகத்திற்கு இடமின்றி ஜீவன்கள் மற்றும் மனிதர்களே ; ஆனால் வெளிப்படையான அல்லது பல தரப்பட்டவைகளை ஆதாரமாகக் கொண்ட மாயைகளில் ( அவித்யா மாயா ) மூழ்கி இருப்பவர்கள் ''மனிதர்கள்''; உள்ளார்ந்த மற்றும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவற்றில்( வித்யா மாயா) ஆழ்ந்திருப்பவர்கள் ''ஆன்மீக சாதகர்கள்''.இறைவன் ஒவ்வொரு இதயத்திலும் கொலு வீற்றிருந்தாலும், அவர்களே அதைக் கண்டு கொள்வதற்கு ஆன்மீக சாதனைகள் அவசியம் அல்லவா? நம்முடைய முகத்தை நாமே பார்த்துக் கொள்ள இயலாது ! நமக்கு ஒரு கண்ணாடி தேவை! அதைப் போலவே, ஒரு அடிப்படைப் பாதை, ஒரு ஆன்மீக சாதனை, மிகவும் அவசியம்.