azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of love! Where the six qualities of zeal, determination, courage, intelligence, ability and heroism are present, there Divine help will manifest. In any field, at any time, success is assured to the person endowed with all these six precious qualities. They help you confront various difficulties from time to time and contribute to your all-round well-being. Just as a student must pass various tests and examinations, these qualities are also subject to trials. Such trials are your stepping stones to high achievements. These trials come in the form of losses, troubles, pains, sufferings and calumny. Unfortunately, many students and elderly alike, lack self-confidence and have become a prey to peacelessness because of their involvement in sensual pleasures. Youth, students and everyone must develop self-confidence. In fact, self-confidence should be the life-breath of every person. Develop self-confidence and embark on the journey of life with faith in God. (Divine Discourse, 23 Jan 1997.)
அன்பின் திரு உருவங்களே !எங்கு ஆர்வம்,மன உறுதி,தைரியம்,புத்தி, திறமை மற்றும் சாகஸம் என்ற ஆறு குணங்களும் இருக்கிறதோ, அங்கு இறைவனது அருளும் பரிமளிக்கும்.எந்தத் துறையிலும், எக்காலத்திலும், இந்த ஆறு குணங்கள் கொண்ட ஒருவருக்கு வெற்றி நிச்சயம்.அவை, அவ்வப்போது தோன்றும் இடர்களை எதிர் கொள்வதில் உதவியளித்து உங்களது முழுமையான நலனுக்கு வழி வகுக்கும்.எவ்வாறு ஒரு மாணவன் பல பரீட்சைகளையும் பரிசோதனைகளையும் எதிர் கொள்ள வேண்டி உள்ளதோ, அவ்வாறே இந்த ஆறு குணங்களும் பல சோதனைகளை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. இந்த சோதனைகள் உயர்ந்த சாதனைகளுக்கான படிக்கட்டுகளாகும்.இந்த சோதனைகள், நஷ்டங்கள், துன்பங்கள்,துயரங்கள், வேதனைகள் மற்றும் பழிகள் என்ற உருவங்களில் வருகின்றன.துரதிருஷ்ட வசமாக, பல மாணவர்களும், பெரியவர்களும் கூட தன்னம்பிக்கைக் குறைவால், அவர்களது புலனின்ப ஈடுபாடுங்களின் காரணமாக, அசாந்திக்கு இரையாகின்றனர்.இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உண்மையில் தன்னம்பிக்கையே ஒவ்வொருவரின் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கைப் பயணத்தை இறை நம்பிக்கையோடு தொடங்குங்கள்.