azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Those, who are trying to build the human community on a foundation of wealth(dhana),are building on sand; those who seek to build it on the rock of righteousness(dharma)are the wise. Every person consumes specific quantities of food and many even calculate the calories consumed and burnt. Just think for a moment: Have you ever calculated what you have given back to the society that helps you live and enjoy in the world? You must transform the food into service, either to serve your best interests or for the well-being of the society. Mere feeding and care of the body is profitless, for the body is just a container. When the spark of Divinity leaves the body, it becomes a corpse. No one will even keep the corpse for more than a few hours. People will avoid the sight and smell of a dead body; it is disgusting. Never be your own enemy nor be a burden on anyone. (Divine Discourse, 3 Feb 1964.)
தனத்தை (செல்வத்தை) அஸ்திவாரமாகக் கொண்டு மனித சமுதாயத்தைக் கட்ட விழைபவர்கள்,மண்ணில் கட்டடம் கட்டுபவர்களைப் போன்றவர்கள்; தர்மம் என்னும் பாறையின் மீது கட்டுபவர்களே புத்திசாலிகள்.ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட அளவு உணவை உண்கிறான்; பலர் எவ்வளவு எரிசக்தியை உட்கொண்டிருக்கிறோம்,எவ்வளவு எரிக்கிறோம் என்றெல்லாம் கூடக் கணக்கிடுகிறார்கள். ஒரு கணம் சிந்தியுங்கள்;இந்த உலகில் நீங்கள் வளமுடன் வாழ்ந்து, இன்புறுவதற்கு உதவும் இந்த சமூகத்திற்கு நீங்கள் எவ்வளவு திருப்பிச் செய்திருக்கிறீர்கள் என்று எப்போதாவது கணக்கிட்டு இருக்கிறீர்களா? நீங்கள் உணவை,உங்களது சிறந்த தேவைகளுக்காகவோ அல்லது இந்த சமுதாயத்தின் நலனுக்காகவோ, சேவையாக மாற்ற வேண்டும். உடலுக்கு வெறும் உணவூட்டிப் பராமரிப்பது பயனற்றது ஏனெனில் இந்த உடல் ஒரு பாத்திரம் மட்டுமே. தெய்வீகத்தின் ஒளிக்கீற்று இதை விட்டு விட்டுப் போய் விட்டால், இது சவமாகி விடுகிறது.ஒரு சவத்தை எவரும் சில மணி நேரங்களுக்கு மேல் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.மனிதர்கள் ஒரு சவத்தின் காட்சி மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க முற்படுவார்கள்; அது அருவறுப்பானதே.ஒரு போதும் உங்களுக்கே எதிரியாகவோ அல்லது பிறருக்குச் சுமையாகவோ இருக்காதீர்கள்.