azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Explaining the characteristics of a devotee, Rama said to Narada, “Whoever with discrimination and renunciation (viveka and vairagya), and humility and wisdom (vinaya and vijnana) is aware of the knowledge of Reality, whoever is always immersed in the contemplation of My play (leela), whoever dwells on My name at all times and under all conditions, and whoever sheds tears of love whenever the Lord’s name is heard from any lip — these are My genuine devotees.” When the infant grows up into an adult, the mother won’t pay so much attention to its safety. The Lord doesn’t pay much attention to the wise one (jnani). For the jnani, their own strength is enough. Therefore, until one can rely on one’s own strength, one must be an infant in the Lord’s hands, as a devotee of the form, right? No one can become a devotee of the Formless Supreme (Nirguna bhaktha) without having been a devotee of the form (Saguna bhakta). (Prema Vahini Ch 48)
ஒரு பக்தனின் குணாதிசியங்களை நாரதருக்கு விளக்கிய ஸ்ரீராமர்,'' எவர் ஒருவர் விவேகம் மற்றும் வைராக்யத்துடன்,பணிவு மற்றும் ஞானத்துடன், உண்மை நிலையைப் பற்றி அறிந்து கொண்டவர்களாகவும்,என்னுடைய லீலைகளை ஸதா ஸர்வ காலமும் தியானிப்பவர்களாகவும், எல்லாக் காலங்களிலும்,எல்லா நிலைகளிலும் என்னுடடைய நாமஸ்மரணை செய்பவர்களாகவும், எந்த உதடுகளிலிருந்து இறை நாமத்தைக் கேட்டாலும், அன்புக் கண்ணீர் சிந்துபவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களே எனது உண்மையான பக்தர்கள் '' என்று கூறினார்.ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டால்,ஒரு தாய் அவனது பாதுகாப்பைப் பற்றி அதிகம் கவனம் செலுத்த மாட்டாள். இறைவன் ஒரு ஞானியைப் பற்றி அதிக கவனம் கொள்வதில்லை. ஒரு ஞானிக்கு அவரது வலிமையே போதுமானதாகும். எனவே, ஒருவர் தனது வலிமையிலேயே தாங்கி நிற்கும் வரை,இறைவனது கரங்களில் ஒரு குழந்தையாகவும்,சகுண பக்தராகவும் இருக்க வேண்டும் இல்லையா?சகுண பக்தராக இல்லாமல் எவரும், நிர்குண பக்தராக ஆக முடியாது.