azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

These days, people are content to visualise and experience evanescent worldly joys. People have no rest. Spending the nights in sleep and days in eating and drinking, they grow and grow, until, in old age, death pursues them. Then, they can’t decide where to go or what to do; all senses have weakened. No one and nothing can rescue them, so they end as obedient meat in the jaws of death! How sad it is that this human life, precious as an invaluable diamond that can’t be priced at all, has been cheapened to the standard of a worn-out worthless coin! There is no use repenting later without meditating on God or practising some spiritual discipline to realise Him now. It is the right of the aspirant(sadhaka)to have the vision of God and not the sight of death (Yama-darshan)! (Prema Vahini, Ch 41)
இந்நாளில் மனிதர்கள் நிலையற்ற உலக சந்தோஷங்களைக் கற்பனை செய்து, அனுபவிப்பதோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள்.மனிதர்களிடம் மன அமைதியே இல்லை. இரவுகளை தூங்கித் தூங்கியும்,பகல்களை உண்பதிலும், குடிப்பதிலும் செலவழித்து வளர்ந்து, இறுதியில் முதிய வயதில் இறப்பு அவர்களைத் துரத்துகிறது.பின்னர் அவர்கள் எங்கு போவது என்ன செய்வது என்பதறியாது திகைக்கிறார்கள்; அனைத்து புலன்களும் வலுவிழந்து நிற்கின்றன. எவரும், எதுவும் அவர்களைக் காக்க முடிவதில்லை; எனவே, இறப்பின் பிடியில் பணிவோடு சிக்கிக் கொள்ளும் மாமிசத் துண்டுகளாக இறுதி அடைந்து விடுகிறார்கள் ! விலை மதிக்க முடியாத மாணிக்கம் போன்ற மனித வாழ்க்கையை, தேய்ந்து போன செல்லாக் காசாக ஆக்கி விடுவது எவ்வளவு வேதனைக்குறியது !இறைவனை தியானிப்பதோ அல்லது அவனை உணருவதற்காக ஆன்மீக சாதனையைச் செய்யாமலோ இருந்து விட்டு, பின்னர் வருந்துவதில் பயனில்லை.இறைவனை தரிசனம் செய்வது சாதகனின் பிறப்புரிமையே அன்றி , இறப்பின் தரிசனத்தை அல்ல ( யம-தர்ஸனம்).