azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Yama (Lord of Death) is as omnipresent as Siva! Yama is associated with the body(deha);He cannot affect the individual soul(jiva).The body is the essential vehicle for the individual soul to understand its real nature. Still, who knows when it may become the target for the attention of Yama, the master of the body? Who knows when this body will get entrapped in the coils of Yama’s ropes? The individual soul, burdened with this easily destructible body, must pay attention to this fact and be all-eager to merge in Siva! People usually procrastinate tasks - yesterday’s tasks are delayed to today and today’s tasks to tomorrow. But the tasks of spiritual discipline are not of such a nature. The minute that just elapsed is beyond your grasp; so too, the approaching minute is not yours! Only that individual soul which has this understanding engraved in its heart can merge in Siva. (Prema Vahini, Ch 39)
இறப்பின் கடவுளான யமன் ,சிவனைப் போல எங்கும் நிறைந்தவன்! யமன் உடலோடு சம்பந்தப் பட்டவன்;அவன் ஜீவாத்மாவை பாதிக்க முடியாது. ஒரு தனிப்பட்ட ஜீவன் தனது உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கான இன்றியமையாத வாகனமே இந்த உடல். இருந்தாலும், இது எப்போது உடலின் யஜமானனான யமனின் கவனத்திற்குக் குறியாகும் என்பதை யார் அறிவார்? இந்த உடல் எப்போது யமனின் பாசக் கயிற்றின் வலைக்குள் சிக்கும் என்று யாருக்குத் தெரியும்? எளிதில் அழியும் இந்த உடலின் பாரத்தைச் சுமக்கும் ஒரு ஜீவன்,இந்த உண்மையில் கண்டிப்பாகக் கவனம் செலுத்தி, சிவனுடன் ஒன்றரக் கலப்பதில் முழுமையான ஆர்வம் கொள்ள வேண்டும்!மனிதர்கள் சாதாரணமாக, நேற்றைய வேலையை இன்றைக்கு என்றும், இன்றைய வேலையை நாளைக்கு என்றும் ஒத்திப் போடுகிறார்கள்.ஆனால் ஆன்மீக சாதனைகளின் பணிகள் அப்படிப் பட்ட தன்மையானவை அல்ல.இப்போதே கழிந்த நிமிடம் உங்களது பிடிக்கு அப்பாற்பட்டது; வருகின்ற நிமிடம் உங்களுடையதல்ல! இந்த உண்மையை இதயத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்ட ஒரு ஜீவனே, சிவனுடன் ஒன்றரக் கலக்க முடியும்.