azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

From the point of view of what one achieves at the end of the journey, there is no difference between a liberated soul (jivanmukta) and a devotee; both are beyond ego (ahamkara), nature (prakriti) with its three attributes or gunas, and the rules and regulations (Dharma) that govern the caste-stage of life (varna-ashrama). The hearts of such will be full of compassion and be filled with the urge to do good to the world. Their divine bliss born of oneness impels them to act in this way. They will have no desires, for desires are the products of feelings of ‘I’ and ‘mine’. Only after these desires are uprooted do people become true devotees, right? So there can be no room in them for desires. They are truly speaking devotees of the embodiments of immortality (amrita-swarupa). For those with that immortal nature, there can be no appetite except for the sweetness of spiritual bliss (ananda). (Prema Vahini, Ch 39)
ஆன்மீகப் பயணத்தின் இறுதியில், ஒருவர் எதை அடைகிறார் என்ற கோணத்தில் பார்த்தால், ஒரு ஜீவன் முக்தருக்கும்,ஒரு பக்தருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை; அவர்கள் இருவருமே, அஹங்காரம், இயற்கையின் முக்குணங்கள்( ஸத்வ,ரஜஸ்,தமஸ்), வர்ணாஸ்ரம நிலைகளை முறைப்படுத்தும் தர்மங்கள் ஆகியவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருப்பார்கள்.இப்படிப் பட்டவர்களின் இதயங்கள் கருணையினால் ததும்பி வழிந்து, உலகத்திற்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உந்துததால் நிரம்பி இருக்கும். ஒருமையினால் தோன்றும் அவர்களது தெய்வீகப் பேரானந்தமே அவர்களை இவ்வாறு செயலாற்றத் தூண்டுகிறது. அவர்கள் ஆசையற்றவர்களாக இருப்பார்கள்; ஏனெனில் ஆசைகள், ''நான்'',''எனது'' என்ற உணர்வுகளால் தோன்றுபவை. இந்த ஆசைகளை வேரோடு களைந்த பின்னர் மட்டுமே இவர்கள் உண்மையான பக்தர் ஆகிறார்கள், சரிதானே?எனவே, அவர்களுள் ஆசைகள் என்பதற்கு இடமே இல்லை.அவர்கள் உண்மையைச் சொல்லப் போனால், அம்ருத ஸ்வரூபத்தின் பக்தர்களே.இப்படிப் பட்ட சாகாத் தன்மை கொண்டவர்களுக்கு, பேரானந்தத்தைத் தவிர எந்த விதமான வேட்கையும் இருப்பதில்லை.