azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Students of today are blind to the goal of life. Some students do not even feel the pain of not knowing the purpose of life. Only one in a million or a crore strives to realise the essence of life. This striving is the stepping stone for the realisation of the purpose of life. Many people feel that the acquisition of food, clothing, shelter, wealth, conveniences, and comforts constitute the very purpose of life. Life remains a tragedy as long as one labours under this kind of delusion. The day one realises the purpose of life, one undergoes a total transformation, fromvedana(agony) tonirvedana(freedom from pain). When one becomes conscious of light, acquires wisdom and realises the meaning of existence, one is transported from agony to ecstasy. Every bit of learning should be based on the foundation of ethical, righteous and spiritual principles. Education that is not founded on these will flounder to the ground and become useless. (Sutra Vahini, Ch 5.)
இன்றைய மாணவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றி கண்மூடித் தனமானவர்களாக இருக்கிறார்கள்.சில மாணவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளை அறியாமல் இருப்பதன் வலியை உணரக்கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.லக்ஷத்தில் அல்லது கோடியில் ஒருவரே வாழ்க்கையின் சாரத்தை உணரப் பாடுபடுகிறார்.இந்த முயற்சியே வாழ்க்கையின் குறிக்கோளை எட்டுவதற்கான முதல் படியாகும்.பல மனிதர்கள் உணவு, உடை,உறைவிடம்,செல்வம்,வசதிகள் மற்றும் சௌகரியங்களைப் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் எனக் கருதுகிறார்கள்.இப்படிப் பட்ட மாயையில் ஒருவர் உழன்று கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை ஒரு சோகக் கதையாகவே இருக்கும். வாழ்க்கையின் குறிக்கோளை ஒருவர் என்று உணருகிறாரோ, அன்றே அவருள் ஒரு முழுமையான மாற்றம் ஏற்படுகிறது; வேதனையிலிருந்து ( வேதனா ) வேதனையற்ற (நிர்வேதனா) நிலைக்கு. எப்போது ஒருவர் ஒளியைப் பற்றிய உணர்வைப் பெற்று, ஞானத்தை அடைந்து, வாழ்க்கையின் அர்த்தத்தை உணருகிறாரோ, அவர் வேதனையிலிருந்து, பரவசப் பேரானந்த நிலைக்கு எடுத்துச் செல்லப் படுகிறார்.கற்றுக் கொள்ளும் ஒவ்வொன்றும்,நீதி நெறியான,தார்மீக மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளை அஸ்திவாரமாகக் கொண்டு இருக்க வேண்டும். இவற்றை ஆதாரமாகக் கொள்ளாத கல்வி வீழ்ச்சி அடைந்து, பயனற்றதாகி விடும்.