azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

You pray to God for trivial worldly things. Distinguish clearly between earthly happiness and divine bliss. Ask for selfless love, which you do not have, but He has in plenty. Pray for love, peace and bliss. God is the embodiment of bliss; His love is supreme without a parallel. He knows what is good for you and will give it. He is a witness to all your thoughts, words and actions. Therefore surrender wholeheartedly unto Him, and lead an ideal life. You are all embodiments of the Divine. So love all and never hurt anyone. If you harm anyone, you are harming the Divine. Love is as vital for a human as fire is vital for a lump of coal to sparkle. Get rid of all your weaknesses by concentrating on Divine Love, as grace is ever flowing and confers the greatest strength. God is the Cosmic Director and all humans are mere actors. So perform your role to please Him! (Divine Discourse, 17 July 1997)
நீங்கள் அற்பமான உலகியல் பொருட்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறீர்கள்.உலகியலான சந்தோஷம்,தெய்வீக பரமானந்தம் என்ற இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் இல்லாத, ஆனால் இறைவனிடம் பெருமளவில் உள்ள தன்னலமற்ற ப்ரேமையைக் கேளுங்கள். ப்ரேமை, சாந்தி மற்றும் ஆனந்தத்திற்காகப் பிரார்த்தியுங்கள்.இறைவன் சச்சிதானந்த ஸ்வரூபன்; அவனது ப்ரேமை தலைசிறந்ததும் ஒப்புயர்வற்றதும் ஆகும்.உங்களுக்கு நல்லது எது என்பதை அவன் அறிவான்; அவன் அதை அளித்தும் விடுவான். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைத்தையும் அவன் சாக்ஷிபூதமாக அறிவான்.எனவே, மனப்பூர்வமாக அவனை சராணாகதி அடைந்து ஒரு இலட்சிய வாழ்க்கையை நடத்துங்கள்.நீங்கள் அனைவரும் தெய்வீகத்தின் திருவுருவங்களே.எனவே, அனைவரையும் நேசியுங்கள்; எவருக்கும் தீங்கிழைக்காதீர்கள்.நீங்கள் எவருக்குத் தீங்கிழைத்தாலும், அது இறைவனுக்கே தீங்கிழைப்பதாகும்.எவ்வாறு ஒரு நிலக்கரிக் கட்டி ஒளி விட்டுத் திகழ நெருப்பு இன்றியமையாததோ, அன்பு ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது,இறை அருள் என்றும் பொங்கிப் பெருக்கெடுத்து தலை சிறந்த வலிமையை அளிப்பதால், தெய்வீக ப்ரேமையில் மனதைக் குவிப்பதன் மூலம் உங்களது அனைத்து பலஹீனங்களையும் விட்டொழியுங்கள். இறைவனே இந்த பிரபஞ்சத்தின் இயக்குனர்; அனைத்து மனிதர்களும் வெறும் நடிகர்களே. எனவே, உங்களது பாத்திரத்தை அவனை மகிழ்விக்கும் வண்ணம் ஏற்று நடியுங்கள் !