azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Youth today are becoming exceedingly greedy and totally selfish, harboring feelings of hatred and jealousy. Their lifestyle of enjoying worldly and carnal pleasures(bhoga)will result in diseases(roga).In ancient times, youth and saints alike, lead a life of sacrifice and sense control(tyagaandyoga)and enjoyed peace and joy. When going on a tour, people like to carry sufficient money for expenses and when they finish the journey or reach the goal, they deposit or hand over the remainder to a trustworthy friend and sleep soundly. All of you are blessed with the wealth of love from the moment of your birth. In this field of worldly activity(Karmakshetra),it is very difficult to safeguard the treasure of love(Prema).Therefore you need to find a faithful friend to hand it over - and the only true friend is God. So hand over the wealth of your love to God, and lead a secured life filled with peace and joy. (Divine Discourse, Jul 17, 1997.)
இளைஞர்கள் இன்று அளவுக்கு மீறிய பேராசை கொண்டவர்களாகவும், முழுவதுமான சுயநலவாதிகளாவும் ஆகி,வெறுப்பு மற்றும் பொறாமை உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அவர்களது உலகியலான மற்றும் புலனின்பங்களை அனுபவிக்கும் வாழ்க்கை முறை (போகா), வியாதிகளில் தான் ( ரோகா ) முடியும். பண்டைய காலத்தில், இளைஞர்களானாலும், துறவிகளானாலும் ஒன்று போல,தியாகமும், புலடக்கமும் ( த்யாகா மற்றும் யோகா ) கொண்ட வாழ்க்கையை நடத்தி, சாந்தி, சந்தோஷங்களை அனுபவித்தார்கள். சுற்றுப் பயணம் செய்யும் போது, மனிதர்கள் செலவுக்குத் தேவையான அளவு பணத்தை எடுத்தச் செல்ல விரும்புகிறார்கள்;அவர்கள் பயணம் முடிந்தவுடனோ அல்லது அடைய வேண்டிய இடத்தை அடைந்த பின்போ, மீதமிருக்கும் பணத்தை, நம்பிக்கைக்கு உகந்த ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டு நிம்மதியாக உறங்குவார்கள்.நீங்கள் அனைவரும் பிறந்த தருணத்திலிருந்தே, அன்பெனும் செல்வம் அருளப் பெற்றவர்களாக இருக்கிறீர்கள். உலகியலான செயற்களத்தில் ( கர்மக்ஷேத்ரம்), இந்த அன்பெனும் பொக்கிஷத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினமானதே.எனவே, நீங்கள் அதைக் கொடுத்து வைக்க ஒரு நம்பிக்கையான நண்பனைக் கண்டு பிடிக்க வேண்டும்.- உண்மையான ஒரே நண்பன் இறைவனே.எனவே, உங்களது அன்பெனும் செல்வத்தை இறைவனிடம் அளித்து விட்டு, சாந்தி, சந்தோஷங்கள் நிறைந்த பாதுகாப்பான வாழ்க்கையை நடத்துங்கள்.