azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

There are three aspects in human beings calledMala, VikshepaandAvarana.Of these,Malarepresents the fruits of actions done in previous births and is the cause ofashanthi(mental disquiet). Until you eliminate this, it will give rise to trouble and sorrow. When you get rid of the burden of the evil effects ofkarmaor past action, you can attain peace. To get rid ofMala,you must engage yourself in sacred tasks. The Lord judges you by the sincerity of your thoughts, not by the forms of your worship. The Lord sees your devotion(bhakthi)and not your power(shakti).He cares for your qualities(gunas)and not your caste, creed or lineage(kula).He looks at your heart(chittam)and not at your wealth(vittham).You must strive to purify your heart and engage yourself in righteous action, with devotion and integrity. No spiritual discipline(sadhana)will serve its purpose if you are involved in sinful deeds. (Divine Discourse, Mar 17, 1983.)
மனிதர்களில் மூன்று அம்சங்கள் உள்ளன;அவையே மலா, விக்ஷேபா, மற்றும் அவரணா. மலா என்பது முந்தைய பிறவிகளில் செய்த கர்மாக்களின் விளைவுகள்; அவையே மனதின் அமைதியின்மைக்குக் காரணம்.இவற்றை நீக்கும் வரை அது துன்பத்திற்கும்,துயரத்திற்கும் வழி வகுக்கும்.எப்போது நீங்கள் கர்ம வினையின் தீய பலன்கள் என்ற சுமையிலிருந்து விடுபடுகிறீர்களோ, அப்போது நீங்கள் சாந்தியைப் பெறலாம். மலாவை நீக்குவதற்கு, நீங்கள் புனிதமான செயல்களில் ஈடுபட வேண்டும்.இறைவன் உங்களது எண்ணங்களின் நேர்மையை வைத்துத் தான் எடைபோடுகிறானே தவிர, உங்களது வழிபாடுகளின் முறைகளை வைத்து அல்ல.இறைவன் உங்களைது பக்தியைப் பார்க்கிறானே அன்றி ,சக்தியை அல்ல. அவன் உங்களது குணங்களைக் கவனிக்கிறானே அன்றி உங்களது குலத்தை அல்ல. உங்களது சித்தத்தை நோக்குகிறானே அன்றி, உங்களது செல்வத்தை ( வித்தத்தை) அல்ல.நீங்கள் உங்களது இதயத்தைத் தூய்மையாக்க விழைந்து, தார்மீகமான செயல்களில் பக்தி,சிரத்தையுடன் ஈடுபட வேண்டும். பாவகரமான செயல்களில் நீங்கள் ஈடுபட்டிருந்தால்,எந்த ஆன்மீக சாதனையும் அதன் பயனை அளிக்காது.