azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The world is a scriptural text. Time is a great preacher. There is no greater teacher than your heart. God is the greatest friend. With full faith in these four entities, lead your life on this earth. Prema (love) is the natural possession of every human being. It is the fruit of the tree of life. There are certain impediments to taste a fruit. You first have to remove the skin and the rind covering the pulp inside and also cast off the seed. The fruit of love is covered by the thick skin of ego. You have to peel off this skin of ‘mine’ and ‘thine’. Then only you can taste the sweet juice. That is why the Vedas describe God as Raso Vai Saḥ (Supreme Sweet Essence). So develop pure love, and through it establish unity with the Divine. The path of love is the shortest and the fastest road to realize the Divine. [Divine Discourse, July 17, 1997]
இந்த உலகமே ஒரு வேதப் புத்தகம் போன்றது.காலமே மிகச் சிறந்த போதகர்.உங்களது இதயத்தை விடச் சிறந்த குரு எவரும் இல்லை. இறைவனே தலை சிறந்த நண்பன்.இந்த நான்கின் மீது முழு நம்பிக்கை கொண்டு,இந்த பூமியில் உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்.ஒவ்வொரு மனிதனின் இயல்பான குணம் ப்ரேமையே. இதுவே வாழ்க்கை எனும் மரம் நல்கும் பழமாகும்.ஒரு பழத்தைச் சுவைப்பதற்கு சில தடங்கள் இருக்கின்றன.நீங்கள் முதலில் மேல் தோலையும், உள்ளிருக்கும் பழத்தை மூடியிருக்கும் மெல்லிய தோலையும் நீக்கி, விதைகளை எடுத்து எறிய வேண்டும்.ப்ரேமை என்னும் பழத்தை அஹங்காரம் என்ற தடியான தோல் மூடி இருக்கிறது.'' நான்'', '' எனது '' என்ற தோலை நீங்கள் நீக்க வேண்டும். பின்னரே நீங்கள் பழச்சாறை சுவைக்க முடியும். அதனால் தான் வேதங்கள் இறைவனை தலை சிறந்த இனிமையான ரசம் ( ரஸோ வை ஸஹ ) என வர்ணிக்கின்றன. எனவே, தூய்மையான அன்பை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் இறைவனுடன் ஒற்றுமையை நிலை நாட்டுங்கள். அன்பின் பாதையே இறைவனை உணர்வதற்கான மிகக் குறைந்த தொலைவுள்ள மற்றும் வேகமான பாதையாகும்.