azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Thejivi(individual self) believing that it is divided from the whole, the Universal, is subject to desire and despair, love and hate, grief and joy, and is attracted by the world of name and form. Such a person is characterised as ‘bound’, and urgently needs liberation. To be liberated, you must give up dependence and attachment to the creation(prakriti).The blind cannot be saved by the blind. How can a person who is as helpless as the other, remove their poverty, suffering, and pain? The poor approach the affluent; the visually impaired seek guidance from those that can see. So too, one who is bound and blinded by the dualities of creation must take refuge in the inexhaustible treasure of compassion, power, and wisdom, namely, the Divine Soul(Atma).Then, you will be rid of destitution and grief, and revel in the wealth of spiritual bliss(Ananda). (Sutra Vahini, Ch 6.)
ஜீவன், தான் பிரபஞ்சமயமான பரப்ரம்மத்திலிருந்து பிரிந்து விட்டதாக நம்பி, ஆசை-நிராசை,விருப்பு-வெறுப்பு,சுகம்-துக்கம் போன்றவைகளுக்கு ஆளாகி, நாம, ரூபங்களாலான இந்த உலகத்தால் கவரப்படுகிறான்.இப்படிப் பட்ட மனிதனைக் ''கட்டுண்டவன்'' என்றே விவரிக்கலாம்; அவன் விரைவாக விடுவிக்கப் பட வேண்டியவன்.விடுதலை பெறுவதற்கு, நீங்கள் பிரக்ருதி மேல் சார்ந்திருப்பதையும்,அதன் மீது உள்ள பற்றுதலையும் விட்டு விட வேண்டும். குருடனை, குருடன் விடுவிக்க இயலாது.பிறரைப் போலவே, உதவியற்றவனாக இருக்கும் ஒருவன், எவ்வாறு ஏழ்மை, துன்பம் மற்றும் துயரத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்? ஏழை, செல்வந்தனை அணுகிறான்; பார்வையற்றவன், பார்வை உள்ளவர்களிடமிருந்து வழி காட்டுதலை நாடுகிறான். அதைப் போலவே, சிருஷ்ட்டியின் இருமைகளால் கட்டுண்டு, கண் தெரியாமல் இருக்கும் ஒருவர், கருணை, வலிமை மற்றும் ஞானத்தின் அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷமான ஆத்மாவில் அடைக்கலம் புக வேண்டும். பின்னர், நீங்கள் தரித்திரம் மற்றும் துயரத்திலிருந்து விடுபட்டு, பரமானந்தத்தின் செல்வச் செழிப்பில் திளைத்திருக்கலாம்.