azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

It is an arduous process for people to become aware of the ‘One’ that is their core. The gross body is the product of the food consumed. But within, there is a subtler force, an inner vibration named vital air(prana).The mind(manas)within is subtler still, and deeper and subtler than the mind is the intellect(vijnana).Beyond the intellect, people have in them the subtlest sheath of spiritual bliss(ananda).When one delves into this region of spiritual bliss, the reality, theBrahmanor the One can be experienced. That awareness is indeed the most desirable. In the Taittiriya Upanishad, while teaching his son Bhrigu theBrahmanphenomenon, Varuna says, “Son!Brahmancannot be seen through the eyes. Know thatBrahmanis that which enables the eyes to see and the ears to hear. He can be known only through extreme yearning in a cleansed mind and concentrated thought. No other means can help.” (Sutra Vahini, Ch 2.)
'' ஒரே ஒன்றாக '' இருக்கும் தங்களது ஆத்ம உட்கருவை உணருவது என்பது மனிதர்களுக்கு மிகவும் கடினமான ஒரு முறையே. வெளித்தோற்றமாக இருக்கும் உடல் உட் கொண்ட அன்னத்தால் ஆனது. ஆனால், இதற்குள் மேலும் நுண்ணியமான சக்தியான உள்ளார்ந்த பிராணன் என்ற அதிர்வு உள்ளது.இதற்குள் இருக்கும் மனம் என்பது அதை விட நுண்ணியமானது; அதற்கும் ஆழமாக, மனதை விடவும் நுண்ணியமானதாக இருப்பது விஞ்ஞானம் என்ற புத்தியாகும்.புத்திக்கும் அப்பாற்பட்டு, மனிதர்கள் தங்களுக்குள் அனைத்தையும் விட நுண்ணிய உறையான ஆனந்தத்தைக் கொண்டுள்ளார்கள்.எப்போது ஒருவர் இந்த ஆன்மீக ஆனந்த பிரதேசத்தில் நுழைகிறாரோ, நித்ய சத்யமான,பரப்பிரம்மம் என்ற '' ஒரே ஒன்றை'' அனுபவிக்க முடியும்.இந்த உணர்வே அனைத்தைக் காட்டிலும் அதிகம் விரும்பத் தக்கதாகும்.தைத்ரீய உபநிஷத்தில், தனது மைந்தனான ப்ருகுவிற்கு, ப்ரம்ம ஞானத்தைப் போதிக்கும்போது, வருணன், '' மகனே! பரப்ரம்மத்தைக் கண்களால் காண முடியாது.கண்களைக் காண வைப்பதும் ,காதுகளைக் கேட்க வைப்பதும் அந்த பரப்பரம்மமே என்பதை அறிவாயாக .தூய்மையான மனம் மற்றும் அந்த மனம் குவிந்த எண்ணத்தினால் எழும் தீவிர தாபத்தின் மூலமாகவே அவனை அறிய முடியும். வேறு எந்த முறையும் உதவ முடியாது.'' என்றார்.