azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Buddhists chant, ‘Buddham saranam gacchami. Dharmam saranam gacchami. Sangam saranam gacchami’. These three maxims imply that firstly, you must sharpen the intellect and the capacity for spiritual discrimination. Next, intelligence must be used in the service of society. Thirdly, service must be based on righteousness. If you follow this, you will experience Bliss. Never harm any living creature in any way, whatsoever. Nonviolence is the supremedharma.Never ever hurt or injure another person in your thought, word, or action. You may wonder: “Is such a thing possible?” Yes it is! With resolution and absolute determination, there is nothing in this world that cannot be achieved. Fear is a great obstacle to achievement. When you realise that the same Divinity resides in all, you will never be afraid of anything or anyone. The more you love your fellow beings, the greater will be your bliss and joy. “Help ever, hurt never” – this is the essence of Buddha’s teaching. (Divine Discourse, 21 May 2000.)
புத்த மதத்தினர், '' புத்தம் சரணம் கச்சாமி,தம்மம் சரணம் கச்சாமி,ஸங்கம் சரணம் கச்சாமி'' என்று ஓதுகின்றனர்.இந்த மூன்று கோட்பாடுகளில், முதலாவது நீங்கள் உங்கள் புத்தியையும்,ஆன்மீகப் பகுத்தறிவையும் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.பிறகு உங்கள் புத்தியை சமூகத்திற்கு சேவை ஆற்றுவதில் பயன்படுத்த வேண்டும். மூன்றாவதாக உங்களது சேவை தார்மீகமானதாக இருக்க வேண்டும்.இதை நீங்கள் பின்பற்றினால், ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். எந்த ஜீவராசிக்கும் எந்த விதத்திலும்,எந்த வழியிலும் தீங்கிழைக்காதீர்கள். அஹிம்ஸையே தலைசிறந்த தர்மமாகும்.உங்கள் எண்ணம், வாக்கு,மற்றும் செயலில் கூட ஒருபோதும் மற்றவருக்குத் தீங்கிழைக்காதீர்கள்.'' இப்படி இருப்பது சாத்தியமா?'' என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆம்! அது முடியும். மன உறுதி மற்றும் திட ஸங்கல்பத்தினால் இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. அச்சமே சாதனைக்கு மிகப் பெரிய தடையாகும்.அதே தெய்வீகம் தான் எல்லோர் உள்ளும் உறைகிறது என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால், நீங்கள் எதைப்பற்றியும்,எவரைப் பற்றியும் அச்சம் கொள்ள மாட்டீர்கள்.சக மனிதர்களை நீங்கள் அதிகமாக நேசிக்க நேசிக்க,உங்கள் சந்தோஷமும், ஆனந்தமும் பெருகிக் கொண்டே போகும்.'' எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் தீங்கிழைக்காதீர்கள்'' -இதுவே, புத்த பகவானின் போதனைகளின் சாரமாகும்.