azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

You may undertake any number of spiritual practices, but never forget God’s name even for a moment. Then you will be protected. Never do anything that will take you away from God. You can achieve anything through prayer. You need not pray loudly; it is sufficient if you pray mentally. Some people misunderstand that God will not rescue them if they do not pray loudly. God resides in your heart. He listens to your prayers all the time. If you aspire to attain His grace, you must contemplate on Him incessantly. Worldly difficulties come and go. Do not attach much importance to them. Through prayer you can overcome any difficulties. Only God’s grace is true and everlasting. God protected the lives of many devotees and alleviated their suffering in response to their prayers. So, make every effort to earn the grace of God. (Divine Discourse, 21 July 2005.)
நீங்கள் பலவிதமான ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ளலாம்; ஆனால் ஒரு கணம் கூட இறைவன் நாமத்தை மறக்காதீர்கள்.பின்னர் நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள்.இறைவனிடமிருந்து உங்களைப் பிரித்து எடுத்துச் செல்லும் எதையும் செய்யாதீர்கள்.நீங்கள் பிரார்த்தனையின் மூலம் எதையும் சாதிக்கலாம்.நீங்கள் உரக்க பிரார்த்திக்க வேண்டும் என்ற அவசியமில்லை: மனதுக்குள் பிரார்த்தித்தாலே போதுமானது.சிலர், உரக்கப் பிரார்த்திக்கவில்லை என்றால் இறைவன் அவர்களைக் காப்பாற்ற மாட்டான் எனத் தவறாக எண்ணுகிறார்கள். இறைவன் உங்கள் இதயத்தில் உறைகிறான். அவன் ஸதாஸர்வகாலமும் உங்களது பிரார்த்தனைகளைக் கேட்கிறான். நீங்கள் அவனது அருளைப் பெற விழைந்தால், அவனை இடையறாது தியானியுங்கள்.உலகியலான கஷ்டங்கள் வரும்,போகும். அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பிரார்த்தனையின் மூலம் நீங்கள் எந்தக் கஷ்டங்களிலிருந்தும் மீள முடியும்.இறைவனது அருள் ஒன்றே உண்மையானதும், சாஸ்வதமானதும் ஆகும்.இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்து,பல பக்தர்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து அவர்களது கஷ்டங்களைப் போக்கியுள்ளான். எனவே, இறைவனது அருளைப் பெற அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.