azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

When Prahlada’s father, Hiranyakasipu drew him near and fondly asked the boy to repeat what he had learnt from his teacher, Prahlada replied, “I learned the secret essence of all learning.” The father was glad and asked him, “Tell me the essential thing that you have mastered.” Prahlada said, “Father! He who illumines everything, He who finally absorbs everything with Himself, is the One, Lord Narayana. Having Him always in mind and experiencing the bliss thereof awards fulfillment to all.” He further said, “Father! You conquered the entire world, but you failed to conquer your senses. How then can you receive grace from Narayana? These material skills and worldly achievements are hollow possessions. The knowledge and experience of the One Divine (Brahma-vidya), that alone is worthy to be pursued,” said the child prodigy. (Sutra Vahini, Ch 2)
பக்த பிரஹலாதனின் தந்தையான ஹிரண்கசிபு,அவனை அருகில் அணைத்து, அவன் தனது குருமார்களிடமிருந்து என்ன கற்றுக் கொண்டான் என்பதைத் திரும்பச் சொல்லுமாறு அன்புடன் கேட்ட போது,ப்ரஹலாதன்,'' நான் அனைத்துக் கல்வியின் சாரத்தின் ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன்.'' என பதிலுரைத்தான். அவன் தந்தை மகிழ்ச்சி அடைந்து,'' நீ கற்றுத் தேர்ந்தவற்றின் மிகவும் அத்தியாவசிமானதைக் கூறு.'' என்று கேட்டார். ப்ரஹலாதன், '' தந்தையே ! அனைத்திற்கும் ப்ரகாசம் அளிப்பவர், அனைத்தையும் இறுதியில் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்பவர் அந்த ஒரே இறைவன் ஸ்ரீமந் நாராயணனே .அவரை அனுதினமும் மனதில் கொண்டு, அதிலிருந்து வரும் ஆனந்தத்தை அனுபவிப்பது அனைத்தையும் பரிபூரணமாக்குகிறது.'' என்றான். அவன் மேலும், '' தந்தையே !நீங்கள் இந்த உலகனைத்தையும் வென்றீர்கள்,ஆனால் உங்களது புலன்களை நீங்கள் வெல்லத் தவறி விட்டீர்கள்.அப்படி என்றால்,உங்களுக்கு ஸ்ரீமந் நாரயணனின் அருள் எப்படிக் கிடைக்கும் ? இந்த உலகியலான திறன்கள் மற்றும் சாதனைகள் மதிப்பற்ற சொத்துக்களே. ப்ரம்ம வித்யாவின் ஞானமும், அனுபவமும் மட்டுமே தேடிப் பெறுவதற்குத் தகுதி படைத்தவை'' என்றான் அதி மேதாவியான அந்தக் குழந்தை.