azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people slander image worship, but its basis is really one’s capacity to see the macrocosm in the microcosm. The value of image worship is testified by experience; it doesn’t depend on one’s imaginative faculty. What is found in the form of the Lord(Virat-swarupa)is also found, undiminished and unalloyed, in the image form(Swarupa).Images serve the same purpose as metaphors and similes in poetry. They illustrate, amplify, and clarify. Joy comes not through the shape of things but through the relationship established. Not any child but her child makes the mother happy. So it is with each one and all things! With each and every thing in the universe, if one establishes that kinship, that Godly love(Iswara prema),then truly an overpowering joy can be experienced! Only those who have felt it can understand. (Prema Vahini, Ch 20.)
பலர் உருவ வழிபாட்டைக் குறை கூறுவார்கள்; ஆனால் ப்ரம்மாண்டமாக இருக்கும் ஒன்றை, சிறு அண்டமாகப் பார்ப்பதில் ஒருவரது இருக்கும் திறனே, உண்மையில் இதன் அடிப்படையாகும். உருவ வழிபாட்டின் மதிப்பு, அனுபவத்தினால் உறுதி செய்யப் படுகிறது;அது ஒருவரது கற்பனைத் திறனைப் பொறுத்ததல்ல. எங்கும் வியாபித்திருக்கும் ( விராட் ஸ்வரூப ) இறைவனில் என்ன காணப்படுகிறதோ, அதுவே குறைவேதுமின்றி, குற்றமேதுமின்றி, அந்த உருவத்திலும் ( ஸ்வரூபம்) காணப்படுகிறது. உருவங்கள், கவிதைகளில் உள்ள உவமான,உவமேயங்களைப் போன்றே பயன்படுகின்றன. அவை எடுத்துக்காட்டி, விவரித்து, விளக்கமளிக்கின்றன. ஆனந்தம், உருவங்களின் மூலம் வருவதில்லை, அவை உருவாக்கப்பட்டுள்ள உறவுகளைப் பொறுத்தே வருகின்றது.எந்தக் குழந்தையும் அல்ல, அவளது குழந்தையே ஒரு தாய்க்கு ஆனந்தத்தை அளிக்கிறது. ஒவ்வொன்றும், எல்லாமும் அதைப் போன்றதே!இந்த ப்ரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுடனும், ஒருவர் அந்த தெய்வீக அன்பான ( ஈஸ்வர ப்ரேமை) உறவை ஏற்படுத்திக் கொண்டு விட்டால், பின்னர், அளவற்ற ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் !இதை உணர்ந்தவர்களே, இதைப் புரிந்து கொள்ள முடியும்.