azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Your love for God should be firm and unchanging, unaffected by trials and tribulations and the vicissitudes of life. Pandavas are supreme examples of unwavering love for Krishna. When Draupadi was being humiliated in Duryodhana's assembly hall, when Abhimanyu was attacked and slain by the Kauravas, when Aswathama massacred theUpa-pandavas (Pandavas’ children), or when they performed the glorious Rajasuya sacrifice at the height of their power, or when they were in exile in the forest, without succumbing to the difficulties and troubles they were subjected to, they adhered firmly to the name of Krishna, with unwavering faith in Him. They relied only on Krishna's love. Difficulties and troubles are passing clouds which come and go. Do you remember all the kith and kin from your previous lives? The only relationship that remains unchanged is the one with God. Attach yourself to Him. (Divine Discourse, 9 Oct 1989.)
இறைவன் பால் நீங்கள் கொள்ளும் அன்பு, வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் படாதததாக, இருக்க வேண்டும். பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்டிருந்த நிலைகுலையாத அன்பின் தலை சிறந்த எடுத்துக் காட்டுக்கள். துரியோதனனின் சபையில் திரௌபதி அவமானப் படுத்தப் பட்ட போதும்,கௌரவர்கள் அபிமன்யுவைத் தாக்கிக் கொன்ற போதும், பாண்டர்களின் புதல்வர்களாகிய, உப பாண்டவர்களை, அஸ்வத்தாமன் படுகொலை செய்த போதும் அல்லது தங்களது ஆதிக்கத்தின் உச்சியில் அவர்கள் மகத்தான ராஜஸூய யாகம் செய்தபோதும் அல்லது அவர்கள் காட்டுக்குச் சென்று வாழ நேர்ந்த போதும், தங்களது துன்பங்கள் மற்றும் கஷ்டங்களுக்குப் பணிந்து விடாமல், அவர்கள் உறுதியாக ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை, நிலைகுலையாத நம்பிக்கையுடன் பற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அன்பை மட்டுமே சார்ந்து இருந்தார்கள். துன்பங்களும், கஷ்டங்களும், வந்து போகும் மேகங்களைப் போன்றவை. உங்களது முந்தைய பிறவிகளின் உற்றார் ,உறவினர்கள் அனைவரையும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இறைவன் பால் கொள்ளும் உறவு ஒன்றே என்றும் மாறாத உறவாகும்.உங்களை அவனுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.