azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

As long as you have worldly desires in view, you cannot escape sorrow. Joy and peace are not present in external objects; they are within you. But in your foolishness, you search for them outside yourself in the external world. For sure, you are bound to depart from this ephemeral world – perhaps today or tomorrow. Therefore realising its impermanence, try to know the essence of the eternal Truth. Try to experience the love that is God(Paramatma)itself. Discriminate at every turn, accepting what is true and discarding the rest. Anyone and everyone can easily grasp the relationship you (jiva) have with your Creator, if you acquire these three chief instruments - (1) a mind unsullied by attachment and hatred (2) speech unsullied by falsehood and (3) a body unsullied by violence. Arise and awaken yourself, here and now! (Prema Vahini, Ch 19)
உலகியலான ஆசைகள் இருக்கும் வரை நீங்கள் துயரத்திலிருந்து தப்ப முடியாது. சாந்தி, சந்தோஷங்கள் வெளிப்புற பொருட்களில் இல்லை; அவை உங்களுள்ளேயே உள்ளன.ஆனால், உங்களது அறிவின்மையால், நீங்கள், உங்களை விடுத்து வெளிப்புற உலகில் அவற்றைத் தேடுகின்றீர்கள். கண்டிப்பாக, நீங்கள் இந்த நிலையற்ற உலகை விட்டு, இன்றோ அல்லது நாளையோ போகத்தான் போகிறீர்கள்.எனவே, இதன் நிலையாமையை உணர்ந்து, நித்ய சத்தியத்தின் சாரத்தைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். அன்பேயான பரப்பரம்மத்தை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு முறையும்,பகுத்தாராய்ந்து, சத்தியமானவற்றை ஏற்றுக் கொண்டு, மற்றவற்றை விலக்கி விடுங்கள். பற்றுதல் மற்றும் த்வேஷம் அற்ற மனம்,பொய்மையால் கறைபடாத பேச்சு, வன்முறையால் மாசடையாத உடல் என்று இந்த பிரதானமான உபகரணங்களை நீங்கள் பெற்றிருந்தால், எவராக இருந்தாலும், ஜீவனாகிய உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இப்போதே, இங்கேயே, நீங்களே எழுச்சியுற்று, விழிப்புணர்வைப் பெறுங்கள் !