azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine has come as Avataronly to teach mankind the truth about love. Love alone is the fruit of love. True Love has no trace of self-interest and knows no fear. The world displays the diversity that has emanated from the One. The Divine demonstrates the unity that subsumes the diversity. Recognition of this ‘Unity in Diversity’ can be learnt only from the Divine. Wherever you go, whatever you do or see, cultivate the sacred feeling that you will do only those actions which pleases God. The Gita has declared: Bear no ill-will towards any living being(Adveshtaa Sarva Bhoothaanaam).Hatred towards anyone is hatred for God. The scriptures have also clearly declared: The salutation that you offer to anyone reaches the Divine. When you fill your hearts with love, you will have no hatred towards anyone. Cultivate the faith that the Divine is in everyone and surrender unto Him in a spirit of true dedication. (Divine Discourse, 3 Sep 1988.)
இறைவன் அவதாரமாக வருவது மனித குலத்திற்கு அன்பின் உண்மையைக் கற்பிப்பதற்கே. அன்பே , அன்பின் விளைவாகும். உண்மையான அன்பில் சுய நலத்தின் சாயல் கூட இருக்காது; அன்பு அச்சம் அறியாதது. ஒரே ஒன்றிலிருந்து தோன்றிய அந்த உலகம் பல விதமான வேறுபாடுகளைக் காட்டுகிறது. தெய்வீகம் இந்த வேற்றுமைகளுக்குள் எல்லாம் உறையும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது. '' வேற்றுமையில் ஒற்றுமை '' என்று உணர்வதை , தெய்வீகத்திலிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.நீங்கள் எங்கு சென்றாலும்,என்ன செய்தாலும் அல்லது பார்த்தாலும்,நீங்கள் இறைவனை மகிழ்விக்கும் செயல்களை மட்டுமே செய்வோம் என்ற புனிதமான உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். ஸ்ரீமத் பகவத் கீதை, ' எந்த ஜீவராசியின் மீதும் வெறுப்பின்றி இருங்கள் ( அத்வேஷ்ட ஸர்வபூதானாம் )'' என அறிவுறுத்துகிறது.எவர் மீது கொள்ளும் வெறுப்பும் இறைவன் மீதே வெறுப்பு கொள்வதைப் போலாகும்.மறை நூல்கள் தெளிவாக இதையும் பறை சாற்றுகின்றன -நீங்கள் எவரை நமஸ்கரித்தாலும், அது இறைவனையே சென்று அடைகிறது.எப்போது நீங்கள் உங்கள் இதயங்களை அன்பால் நிரப்பிக் கொள்கிறீர்களோ, உங்களுக்கு எவர் மீதும் வெறுப்பு இருக்காது.இறைவன் ஒவ்வொருவருள்ளும் உறைகிறான் என்ற உணர்வை வளர்ததுக் கொண்டு, உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் அவனிடம் ஸரணாகதி அடையுங்கள்.