azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

A person filled with greed, fear and anger cannot achieve anything in this world. Excessive desires degrade man. You cannot give up desires entirely. But there should be a limit to them. When they exceed the limits you will go astray. Desires are dreadfully dangerous. Today's enemy may become tomorrow's friend and vice versa. But desire and greed are your perpetual enemies. They will haunt ceaselessly. The Gita clearly declares desire as theNithya-shathru(eternal enemy) of man. Hence keep desire under control. Embodiments of Divine love! Always remember, the person without egoistic pride will be liked by everyone(Maanam hithvaa priyo bhavathi).The secret to be free from grief is to be without hatred(Krodham hithvaa na sochathi).One who has given up desire is free from worries(Kaamam hithvaa aarthona bhavathi).If you overcome greed you will become happy(Lobham hithvaa sukhee bhavathi). (Divine Discourse, 1 Apr 1995.)
பேராசை,பயம் மற்றும் கோபம் நிறைந்த ஒரு மனிதனால் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியாது. அளவுக்கு மீறிய ஆசைகள் ஒரு மனிதனைத் தாழ்த்தி விடுகின்றன. நீங்கள் ஆசைகளை முழுமையாக விட்டு விடவும் முடியாது. ஆனால் அவற்றிற்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும்.அந்த வரம்பை நீங்கள் மீறும்போது, நீங்கள் பாதை தவறி விடுகிறீர்கள். ஆசைகள் பயங்கரமான அபாயங்களை ஏற்படுத்தக் கூடியவை.இன்றைய எதிரி உங்களது நாளைய நண்பனாகலாம், இன்றைய நண்பன், உங்களது நாளைய எதிரியாகலாம்.ஆனால் ஆசையும், பேராசையும் உங்களது நிரந்தர எதிரிகள்.உங்களை இடைறயாது அவை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கும். ஸ்ரீமத் பகவத் கீதை, ஆசைகள் உங்களது '' நித்ய சத்ரு'' ( நிரந்தர எதிரி ) எனத் தெளிவாக வர்ணிக்கிறது. எனவே, ஆசைகளை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருங்கள். தெய்வீக அன்பின் வடிவங்களே ! அஹங்காரத் தற்பெருமை அற்ற மனிதனை ஒவ்வொருவரும் விரும்புவார்கள் (மானம் ஹித்வா ப்ரியோ பவதி). துயரமின்றி இருப்பதன் ரகசியம்,வெறுப்பு இன்றி இருப்பதே ஆகும் ( க்ரோதம் ஹித்வா ந ஸோசதி). ஆசைகளை விடுத்த ஒருவன் கவலைகளே அற்றவனாக இருப்பான் (காமம் ஹித்வா ஆர்த்தோனா பவதி). நீங்கள் பேராசையை வென்று விட்டால், சுகமாக இருப்பீர்கள் (லோபம் ஹித்வா சுகீ பவதி ).