azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The devotee's feelings determine their concept of God. When a devotee prays, "Oh Lord! I am suffering intensely. Can't you see the troubles I am going through?" The Lord appears to him only as a pair of eyes. Today, most people meditate and during meditation, they appear like yogis. After the meditation is over, they return to their daily activities, immersing themselves in mundane pleasures. This is not the way of life the Lord preached. Lord Krishna declared:Sathatham Yoginah(Be yogis at all times). Think of the Divine at all times, in all situations, in whatever you see, do, say or experience. To pray to God when you are comfortable and to blame God when you are in trouble reflects a selfish and narrow outlook. What is bound to happen cannot be prevented. Regard anything that happens as a gift from God. It is only when you develop such faith and love for God that true spirituality can grow. (Divine Discourse, 3 Sep 1988.)
பக்தர்களது உணர்வுகளே,அவர்களது இறைத் தத்துவத்தைத் தீர்மானிக்கிறது. ஒரு பக்தர்,'' இறைவனே ! நான் மிகவும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறேன்.நான் படும் துன்பங்களை நீ காணவில்லையா?'' என்று பிரார்த்திக்கும் போது, இறைவன், அவருக்கு ஒரு ஜோடி கண்களாகத் தான் தோன்றுகிறான்.இன்று பெரும்பாலான மனிதர்கள் தியானம் செய்கிறார்கள்;தியானத்தின் போது அவர்கள் யோகிகளைப் போலக் காட்சி அளிக்கிறார்கள்.தியானம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கைச் செயல்களுக்குத் திரும்பி, உலகியலான சுகங்களில் ஆழ்ந்து விடுகிறார்கள்.இறைவன் போதித்த வாழ்க்கை முறை இதுவல்ல. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ''ஸததம் யோகின:'' என்று பறை சாற்றினார் ( எப்போதும் யோகியாக இருங்கள் ),இறைவனை எல்லாக் காலங்களிலும்,எல்லா சந்தர்ப்பங்களிலும், நீங்கள் காண்பது,செய்வது அல்லது உணர்வது அனைத்திலும்,நினைவு கூறுங்கள்.சௌகரியமாக இருக்கும்போது இறைவனைப் போற்றுவதும்,நீங்கள் துன்பப் படும்போது இறைவனைத் தூற்றுவதும், ஒரு சுயநலமான, குறுகிய மனப்பாங்கினைக் காட்டுகிறது. என்ன நிகழ வேண்டுமோ, அதனைத் தடுக்க இயலாது.நிகழ்வது அனைத்தையும் இறைவன் அளிக்கும் பரிசாகக் கருதுங்கள்.இறைவன் பால் இப்படிப் பட்ட நம்பிக்கை மற்றும் அன்பை வளர்த்துக் கொள்ளும் போதுதான் , உண்மையான ஆன்மீகம் வளர முடியும்.