azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Since many separate religions have spread worldwide, they have lost fraternal feelings and thereby have suffered in validity. There is an urgent need for harmony. The principle of harmonizing is the very heart of all religions and faiths. The principles of coordination and reconciliation must be expanded and expounded. Though religions have separate names and distinct doctrines, in essence, all are one emphasising a common core. The experience and wisdom of great seers who have unveiled the mystery of the cosmos and their feelings of universal love are not appreciated, accepted, and respected. The same God is extolled and adored in various names through varied ceremonial rituals. In every age, in every race, God sent prophets to establish peace and goodwill. All great people are images of God. They form one single caste in the realm of God; they belong to one nation, the Divine Fellowship. (Sutra Vahini, Ch 2.)
தனித்தனியான பல மதங்கள் உலகெங்கும் பரவியதால், அவை சகோதரத்துவ உணர்வுகளை இழந்து விட்டன; அதன் காரணத்தால் அவற்றின் ஏற்புடமை பாதிக்கப் பட்டு விட்டது. இப்போதைய மிகவும் அவசரமான ஒரு தேவை மனித குலத்தின் இசைவே. இசைவை ஏற்படுத்துவதே, அனைத்து மதங்களின் அடிப்படைத் தத்துவமாகும். ஒருங்கிணைப்பு மற்றும் சமாதானத்தின் கோட்பாடுகள் விரிவு படுத்தப் பட்டு,விளக்கப் பட வேண்டும். மதங்கள் வெவ்வேறு பெயர்கள் மற்றும் தனித்தனிக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் ஒரே அடிப்படைத் தத்துவத்தைத் தான், உண்மையில் வலியுறுத்துகின்றன. இந்த பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டறிந்த தலைசிறந்த முனிவர்களின் ஞானம் மற்றும் அனுபவங்கள் மற்றும் அவர்களது பிரபஞ்சமயமான ப்ரேமை உணர்வுகள் ஆகியவை பாராட்டப்படுவதோ, ஏற்றுக் கொள்ளப் படுவதோ, மதிக்கப் படுவதோ இல்லை.ஒரே இறைவன் தான் பல விதமான நாமங்களில், பலதரப்பட்ட சடங்குகளின் மூலம் போற்றிப் பாராட்டப் படுகிறான். ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு குலத்திற்கும் இறைவன் பல இறைதூதர்களை சாந்தி மற்றும் நல்லுறவை நிலாநாட்டுவதற்காக அனுப்பியிருக்கிறான். அனைத்து மஹான்களும் இறைவனின் திரு உருவங்களே. இறைவனது சாம்ராஜ்யத்தில், அவர்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்களே; அவர்கள் அனைவரும் தெய்வீக நல்லுணர்வு என்ற ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களே.